வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!

|

BSNL-ல் 4G சேவை வருவது உறுதி., ஆனால் நேரமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். இதே போன்ற வார்த்தை எங்கோ கேட்டது போல் உள்ளதா, ஆம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த அறிவிப்பு தான். அதேபோல் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஒவ்வொரு தேதியாக வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை மார்ச் 1 ஆம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதன் தேதி மீண்டும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜியோ, ஏர்டெல் வோடபோன் நிறுவனத்தின் மைண்ட் வாய்ஸ் வருமா., வராதா இல்ல ஏதாவது அறிகுறி இருக்கா என்ற வகையில் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.

கடன் பாக்கித் தொகை ரூ.1,700 கோடி

கடன் பாக்கித் தொகை ரூ.1,700 கோடி

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்) நிறுவனம், விற்பனை முகவா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு கடன் பாக்கித் தொகை ரூ.1,700 கோடியை சமீபத்தில் அளித்தது. மேலும், பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியத்தையும் வழங்கியது. சமீபத்தில் இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநா் பி.கே.புா்வாா் கூறியிருந்தார்.

உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

ஊதியம் ரூ.800 கோடி

ஊதியம் ரூ.800 கோடி

ரூ.10,000 கோடி கடன் அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.10,000 கோடி கடன் உள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததாரா்கள், விற்பனை முகவா்கள் ஆகியோருக்கு ரூ.1,700 கோடி கடன் பாக்கித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு நவம்பா் மாதம் ஊதியம் ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரூ.69,000 கோடியில் வலுப்படுத்தும் திட்டம்

ரூ.69,000 கோடியில் வலுப்படுத்தும் திட்டம்

நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஊதிய செலவை மிச்சம் செய்து அதை தொகையை திட்டத்திற்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ரூ.69,000 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்துக்கும், 4ஜி சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியா்கள் விருப்ப ஓய்வுபெறும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மார்ச் 1 ஆம் தேதி சேவை என முன்னதாக அறிவிப்பு

மார்ச் 1 ஆம் தேதி சேவை என முன்னதாக அறிவிப்பு

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை பிஎஸ்என்எல் 4 ஜி சேவை பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தாலும், முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையானது, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கிடைக்கும். முன்னதாக 20 வட்டங்களிலும் அதிகாரப்பூர்வமாக செல்லும். மார்ச் 1 ஆம் தேதி சேவை என அறிவிக்கப்பட்டதும் பிஎஸ்என்எல் அதன் புதிய 4 ஜி-ஒன்லி திட்டங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவை

3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் தற்போது கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பல பகுதிகளில் அதன் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. சில வட்டங்களில், பிஎஸ்என்எல் ஏற்கனவே இருக்கும் 3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் முழு அளவிலான வெளியீடானது மார்ச் 1 ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம்

ஏப்ரல் 1 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம்

இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 19 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் சஞ்சய் சாம்ராவ் தோட்ரே தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இந்தியாவின் மூல சொத்து என்றும் அதை மூடுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் உறுதி அளிப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

வருவாய் ஈட்ட திட்டம்

வருவாய் ஈட்ட திட்டம்

அரசாங்கக் கொள்கையின்படி, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்கள் டவர்களை தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அதேபோல் பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை வருகிற ஏப்ரம் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
BSNL 4G launch date changed from march 1 and bsnl introduce new 4g plans!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X