Home
News

BSNL 4G வந்தாச்சு.. ஆனாலும் உங்கள் போனில் சிக்னல் கிடைக்கலையா? அப்போ இது தான் காரணம்.. உடனே தெரிஞ்சுக்கோங்க..

மாநில அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம், பல தொலைத்தொடர்பு வட்டாரங்களிலும், பெரிய நகரங்களிலும் ஏற்கனவே அதன் புதிய பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) நெட்வொர்க் சேவையை கிடைக்க செய்துள்ளன. இருப்பினும், பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம் செய்யப்பட்ட வட்டங்களில் இன்னும் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிக்னல் கிடைக்காமல் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதற்கான காரணம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் ஏரியாவில் BSNL 4G கிடைத்தும், உங்கள் போனில் BSNL 4ஜி கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம். தொடர்ந்து படியுங்கள்.

இந்தியா முழுவதும் BSNL தனது 4G சேவையை விரிவுபடுத்த தயாராகி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அதன் பல மொபைல் நெட்வொர்க் வட்டங்களில் புதிய 4ஜி டவர்களை நிறுவி, சிக்னல் தரம் மற்றும் பலத்தை நாட்டில் உயர்த்தி வருகிறது. BSNL நாடு முழுவதும் தனது 4G நெட்வொர்க்கிற்காக 1 லட்சம் மொபைல் டவர்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது. இதை அக்டோபர் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

BSNL 4G வந்தாச்சு.. ஆனாலும் உங்கள் போனில் சிக்னல் கிடைக்கலையா? காரணம்?

BSNL 4G வந்தாச்சு.. ஆனாலும் உங்கள் போனில் சிக்னல் கிடைக்கலையா?

இதன் காரணமாக, இந்த மாத இறுதிக்குள் 75 ஆயிரம் புதிய டவர்களை BSNL நிறுவ முடிவு செய்துள்ளது. இதுவரை 25,000 மொபைல் டவர்களை BSNL பல இடங்களில் நிறுவி, பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. இருப்பினும், சில பயனாளர்கள் BSNL இன் 4G நெட்வொர்க்கை அணுகுவதில் இன்னும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதற்கு அவர்களின் கையில் ஸ்மார்ட்போன்களே காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

BSNL நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறையால் அதன் 4G சேவைகளுக்காக 700MHz மற்றும் 2100MHz என்ற இரண்டு ஸ்பெக்ட்ரம் பேண்ட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், இந்த பேண்ட்களைப் பயன்படுத்தி BSNL நிறுவனம் தனது 4G நெட்வொர்க்கை நிறுவுகிறது. 2100MHz பேண்டுக்கு மிகக் குறைந்த திறன் மட்டுமே உள்ளது. இதனால் குறைந்தளவு பயனர்கள் மட்டுமே 4ஜி உடன் இணைய முடியும்.

இதன் காரணமாக சில பயனாளர்களுக்கு இணைப்பு பிரச்சினைகள் உருவாகியுள்ளது. அடுத்தபடியாக, 700MHz பேண்ட் முதன்மையாக 5G சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், 4G மற்றும் 5G ஆகிய இரண்டு சேவைகளுக்காக BSNL-க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 700MHz ஸ்பெக்ட்ரம் பேண்டை ஆதரிக்கும் மொபைல் சாதனங்களுக்கான தற்போதைய சூழல் 4G மற்றும் 5G சேவைகளுக்கு முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.

BSNL 4G கிடைக்கலையா? அப்போ உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போன் ஒரு காரணமாக இருக்கலாம்:

இதுவரை, ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே 700MHz பேண்டை பெற்றுள்ளது. ஆனால், அதை ஜியோ இன்னும் அதன் 5G சேவைகளுக்கு பயன்படுத்தவில்லை. மொபைல் சாதனத்தின் இணக்கத்தன்மையில் உள்ள இந்த இடைவெளி சில பயனாளர்கள் BSNL இன் புதிய நெட்வொர்க்கை அணுக முடியாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை சரி செய்ய, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்கள் சாதனங்களில் BSNL இன் 700MHz அல்லது B28 பேண்ட்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை உறுதி செய்யும் விதமாக தொலைத்தொடர்புத் துறையும், அமைச்சகமும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் அனுப்பியுள்ளன. அதில் அவர்கள், 4G ஸ்மார்ட்போன்களின் வரவிருக்கும் மாதிரிகளில் 700 MHz பேண்ட்க்கான ஆதரவை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு, பிஎஸ்என்எல் 4ஜி சில பழைய 4ஜி மாடல் ஸ்மார்ட்போன்களில் இணக்கமாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், புதிய 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை கொண்ட பயனர்களுக்கு பிஎஸ்என்எல் 4ஜி பயன்படுத்த கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை உங்கள் பகுதியில் BSNL 4G இருந்தும், உங்களுக்கு அணுக கிடைக்கவில்லை என்றால், அதற்கு உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போன் ஒரு காரணமாக இருக்கலாம் மக்களே.

Best Mobiles in India

English summary
BSNL 4G has arrived but still you can't get signal on your phone? Then this is the reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X