Home
News

போட்றா வெடிய.. BSNL 4G அறிமுகம்.. புண்ணியம் கட்டிய TATA.. ஸ்பீடு அள்ளுது.. பக்கத்து ஸ்டேட் கஸ்டமர்ஸ் குஷி!

கொடுத்து வச்ச கஸ்டமர்கள்ப்பா என்று.. தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் (BSNL Tamil Nadu Customers) கண் வைக்கும் அளவிற்கு.. நம்முடைய அண்டை மாநிலம் ஒன்றில் பிஎஸ்என்எல் 4ஜி கோர் (BSNL 4G Core) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன மாநிலம்? பிஎஸ்என்எல் 4ஜி கோர் என்றால் என்ன? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல் என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது அதன் உள்நாட்டு 4ஜி கோர் (Indigenous 4G core) நெட்வொர்க்கை தெலுங்கானாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது தெலுங்கானாவில்,பிஎஸ்என்எல்-ன் 4ஜி கோர் நெட்வொர்க் இயங்குகிறது மற்றும் அந்த பிஎஸ்என்எல் பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது வேகமான இண்டர்நெட் ஸ்பீடை பெறுகிறார்கள்.

BSNL 4G அறிமுகம்.. புண்ணியம் கட்டிய TATA.. ஸ்பீடு அள்ளுது!

இது டிசிஎஸ் (TCS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) தலைமையிலான கூட்டமைப்பின் கீழ் சாத்தியமாகி உள்ளது. இந்த கூட்டமைப்பில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) மற்றும் சி-டாட் (C-DoT) என்று அறியப்படும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) ஆகியவைகளும் உள்ளன.

இதற்கான கோர் (Core) ஆனது சி-டாட் மூலம் வழங்கப்படுகிறது, ரான் (RAN) ஆனது அதாவது ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் (Radio access network) கருவிகள் ஆனது தேஜாஸ் நெட்வொர்க்கால் வழங்கப்படுகின்றன. டிசிஎஸ் நிறுவனமானது எஸ்ஐ( SI) ஆக, அதாவது சிஸ்டம்ஸ் இன்டக்ரேட்டர் (Systems integrator) ஆக பங்கு வகிக்கிறது. டாடாவுக்கு சொந்தமான இந்நிறுவனம் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்குகளை பராமரிப்பதற்குமான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 41,000 க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவி, இயக்கியுள்ளது. அதே நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்ட தளங்களின் நிறுவல் முடிந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 1 லட்சம் 4ஜி தளங்களை நிறுவ வேண்டும் என்கிறன் மைல்கல்லை எட்டுவதற்கான பாதையில் பிஎஸ்என்எல் நிறுவனம் உள்ளது.

பிஎஸ்என்எல் ஏன் இப்படி 4ஜி மீது மட்டுமே குறியாக இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு 5ஜி அறிமுகம் பற்றி எந்த கவலையும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் .. பிஎஸ்என்எல் நிறுவனத்தால், அதன் 4ஜி தொழில்நுட்பத்தில் இருந்து எளிய மேம்படுத்தல் (Simple upgrade) மூலம் பிஎஸ்என்எல் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற முடியும். ஆக 4ஜி முழுமையாக வெளிவந்தவுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மிகவும் விரைவாக 5ஜி-ஐ வெளியிட முடியும்.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சிம் கார்டு தொடர்பான முக்கிய மாற்றத்தை அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு (யுஏஇ) பயணம் செய்வதற்கு முன் சர்வதேச சிம் கார்டுக்கு மாற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த சிக்கலை சரிசெய்யும் நோக்கத்தின் கீழ் ரூ.57 மற்றும் ரூ.167 க்கு 2 ஸ்பெஷல் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

ரூ.167 திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்; மறுகையில் உள்ள ரூ.57 திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த 2 திட்டங்களுமே வழக்கமான பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை சர்வதேச அளவில் செயல்பட வைக்கும். இருப்பினும், காலிங் மற்றும் டேட்டா சேவைகளை பெற பயனர்கள் கூடுதல் டாப்-அப்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இருப்பினும் தற்போது வரையிலாக இந்த வசதி (புதிய ஸ்பெஷல் ரீசார்ஜ்கள்) கேரளா வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. எனவே மற்ற பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இது வேலை செய்யாமல் போகலாம் என்பதால் தேவை இல்லாமல் ரூ.57 அல்லது ரூ.167-ஐ ரீசார்ஜ் செய்து பார்க்க வேண்டாம். எதிர்காலத்தில் மற்ற வெளிநாடுகளுக்கும், மற்ற வட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்ளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G Core Launched in Telangana Now Customers Getting Fast Internet Speed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X