Home
News

BSNL 4G மற்றும் 5G: பார்லிமென்டரி கமிட்டிக்கு BSNL அதிகாரி சொன்னது என்ன? 6 மாசத்தில் இது நடக்குமா?

இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம், பிஎஸ்என்எல் சிம் பொருத்தப்பட்ட மொபைல் போன்களை சில எம்பிகளுக்கு (MP) வழங்கியது. இதை சில காலமாக பயன்படுத்தி வந்த எம்பிகள் இப்போது பிஎஸ்என்எல் சேவை திருப்திகரமாக இல்லை என்று புகார் அளித்துள்ளனர். அதேபோல், பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவை இன்னும் பெரும்பாலான இடங்களில் விரிவுபடுத்தப்படாமல் இருக்கிறது என்றும், பிஎஸ்என்எல் என்ன வேகத்தில் வேலை செய்து வருகிறதென்றும் உடனே பதில் அளிக்க வேண்டுமென்று பார்லிமென்டரி-கமிட்டி உத்தரவிட்டது.

திங்கட்கிழமை நடந்த ஒரு மீட்டிங்கில் இது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டது. தொலைத்தொடர்பு செயலாளர் நீரஜ் மித்தல் மற்றும் BSNL இன் CMD உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். BSNL இன் குறைந்து வரும் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறித்து பாராளுமன்ற குழு கவலை தெரிவித்தது. இது BSNL வழங்கிய நம்பிக்கையை உடைப்பது போல் தெரிவதாக கூறப்பட்டது.

BSNL 4G மற்றும் 5G: பார்லிமென்டரி கமிட்டிக்கு BSNL சொன்னது என்ன?

BSNL 4G மற்றும் 5G சேவை பற்றி அதிகாரிகள் சொன்னது என்ன?

இதனை தொடர்ந்து, பிஎஸ்என்எல் சிம் பொருத்தப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்தி வந்த எம்பிகள் பிஎஸ்என்எல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று கூறியதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சிறப்பாக 4G-க்கு மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் 5G தொழில்நுட்பத்திற்கு மாறுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைப்பின் செயல்திறன் குறித்த விவாதங்களின் நடுவில், BSNL அதிகாரிகள் தங்கள் உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்தும் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தனர்.

BSNL நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் தற்போதுள்ள 24,000 டவர்களிலிருந்து கணிசமாக அதிகரித்து, சுமார் 100,000 மொபைல் டவர்களை 4G திறன் கொண்டதாக மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை, 'ஆத்மநிர்பர் பாரத்' (Aatmanirbhar Bharat) முன்முயற்சியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று BSNL அதிகாரி தெரிவித்தார். இது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் BSNL இன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

இந்த மகத்தான இலக்கை நோக்கி ஒரு மாபெரும் படியாக, இப்போது சுமார் 54,000 புதிய BSNL 4G டவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நிறுவப்பட தயாராக உள்ளது என்று BSNL-ன் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும், கூடுதல் டவர்களை நிறுவன BSNL திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பார்லிமென்ட்ரி கமிட்டிக்கு BSNL விளக்கமளித்துள்ளது. சுமார் 1,00,000 புதிய BSNL டவர்களை 6 மாதத்திற்குள் BSNL நிறுவி முடிக்கும் என்று உறுதியளித்துள்ளது.

6 மாதத்திற்குள் BSNL இந்தியாவின் மக்கள் விரும்பும் நெட்வொர்க்காக மாறும்:

இதன் மூலம் BSNL இன் சேவை தரம் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் பல மடங்கும் உயரும் என்று BSNL தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, BSNL அதிகாரிகள் BSNL 4G இலிருந்து BSNL 5G சேவைக்கு மாறுவதன் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினர். தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஒரு முன்னோக்கு அணுகுமுறையாக BSNL 4ஜி - BSNL 5G டிரான்சிஷன் மிக எளிமையாக இருக்க போகிறது என்று என்று கூறியுள்ளனர்.

எனினும், BSNL இன் சந்தை பங்கு, ஏழு சதவீதத்திற்கு குறைந்துள்ளது என்பது குழுவுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயமாக இருந்தது. மொபைல் இணைப்புகளுக்கு மக்கள், BSNL ஐ விட தனியார் ஆபரேட்டர்களை விரும்புவது தெளிவாக தெரிகிறது என்று குழு கூறியுள்ளது. BSNL அதன் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை புதுப்பித்து போட்டித்தன்மையை மீண்டும் பெற வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தது. அடுத்த 6 மாதத்திற்குள் BSNL இந்தியாவின் மக்கள் விரும்பும் நெட்வொர்க்காக மாறும் என்று BSNL உறுதியளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G and 5G Update Details Said By Officials To Parliamentary Committee Expect Good Service Within 6 Months
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X