BSNL 4G மற்றும் 5G தரம் சுமாரா தான் இருக்குமா? உண்மை என்ன? BSNL உண்மையாவே கெத்து தானா? வெளியான பரபரப்பு தகவல்
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற இந்தியாவில் உள்ள தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஜூலை மாதத்தில் தங்கள் கட்டணத் திட்டங்களை சராசரியாக 15 சதவீதம் முதல் 22% வரை உயர்த்தியுள்ளனர். இந்த அதிகரிப்பு பல சந்தாதாரர்களை பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்கிற்கு மாற வழிவகுத்தது. ஏனெனில் இது மட்டுமே மலிவான ரீசார்ஜ் விருப்பங்களை கொண்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்த மாற்றத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BNSL 4G) சேவைகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
மறுபுறம் மக்களின் நம்பிக்கையை பெற, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சேவைகளுக்கான சோதனைகளை தொடங்கியுள்ளது. இதை சிறப்பாக செய்து முடிக்க BSNL ஸ்பெக்ட்ரம் உத்தியானது, அதன் 4G நெட்வொர்க்கை முதன்மையான2100 MHz பேண்டில் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் போதுமான கவரேஜை வழங்காது மற்றும் உயர்தர 4ஜி சேவைகளை தனியார் நிறுவனங்கள் போல வழங்க இயலாது என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

BSNL 4G மற்றும் 5G தரம் சுமாரா தான் இருக்குமா?
பல்வேறு பகுதிகளில் 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் பிஎஸ்என்எல் இப்போதே 20,000 தளங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்டாலும், இந்த தேர்வு வோடபோன் ஐடியா போன்ற பிற ஆபரேட்டர்களை அச்சுறுத்தாது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். BSNL நிறுவனம் 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் தற்போதுள்ள 3ஜி (3G) சேவைகளை 4ஜிக்கு மேம்படுத்துவதையும், மேம்படுத்தப்பட்ட கவரேஜ் மற்றும் திறனுக்காக 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் எதிர்கால 5ஜி சேவைகளுக்கு 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டைப் பயன்படுத்துவதை பரிசீலிக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், 800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒதுக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்பதனால் வாதம் துவங்கியுள்ளது. BSNL இன் வரவிருக்கும் 4G சேவைகளில் எதிர்பார்க்கப்படும் தர சிக்கல்கள் காரணமாக BSNL-க்கு மாறிய சந்தாதாரர்கள் இறுதியில் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்குத் திரும்பலாம் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
BSNL இன் ஸ்பெக்ட்ரம் தேர்வுகள் தனியார் ஆபரேட்டர்கள் வழங்கும் அதே அளவிலான சேவைத் தரத்தை வழங்காது என்ற கருத்து தற்போது சிலருக்கு கவலையை உருவாக்கியுள்ளது. BSNL 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை அதன் நெட்வொர்க் வரிசைப்படுத்தலுக்குப் பயன்படுத்துவது ஒரு சாத்தியமான குறைபாடாகக் கருதப்படுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் மேம்பட்ட ஸ்பெக்ட்ரம் உத்திகளை வழங்குவதை ஒப்பிடுகையில், இந்த பேண்ட்வித் குறைவான கவரேஜ்ஜை வழங்குமென்று கருதப்படுகிறது.
BSNL 5G வேகம் எப்படி இருக்கும்?
எதிர்கால மேம்பாடுகளைப் பொறுத்தவரை, BSNL தனது வணிக ரீதியான 4G சேவைகளை விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. மேலும் அதன் வரவிருக்கும் 5G சேவைகளுக்கான சோதனைகளை நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது. வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுக்கு எதிராக வலுவான போட்டியை வழங்குவதில் 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்டை நிறுவனம் வைத்திருப்பது ஒரு சாத்தியமான நன்மையாகக் குறிப்பிடப்படுகிறது.
பிஎஸ்என்எல் அதன் எதிர்கால 5ஜி நெட்வொர்க்கிற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 3500 மெகா ஹெர்ட்ஸ் பேண்டுகளைப் பயன்படுத்தினால், அது போட்டித்தன்மையுடன் இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது BSNL குறைந்த நெட்வொர்க் நெரிசலை அனுபவித்தால் இந்த நன்மை குறிப்பாக குறிப்பிடத்தக்கதாக இருக்கும். BSNL அதன் நெட்வொர்க் திறன்களை விரிவுபடுத்தும் அதே வேளையில், சமீபத்திய கட்டண உயர்வுகளால் தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து மாறிய சந்தாதாரர்களைத் தக்கவைக்க BSNL மாற்றத்தைகொண்டுவரும்.
இந்தியாவின் டெலிகாம் துறையின் வளர்ந்து வரும் நிலப்பரப்பு, சேவைத் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட தனியார் நிறுவனங்களுடன் BSNL எவ்வளவு சிறப்பாக போட்டியிட முடியும் என்பதை தீர்மானிக்கும். இறுதியில், எந்தவித மோசமான அனுபவத்தையும் பயனர்கள் அனுபவிக்கமாட்டார்கள் என்று பிஎஸ்என்எல் தரப்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








