Home
News

ஆடிப்போன Jio, Airtel, Vi.. தமிழ்நாட்டில் BSNL 5G ரெடியா? கூட்டம் கூட்டமாக BSNLக்கு தாவும் மக்கள்..

பிஎன்என்எல் (BSNL) என்று அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தனியார் நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைக்க துவங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத, டெலிகாம் பயனர்கள், இப்போது கூட்டம் கூட்டமாக BSNL அலுவலகங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (Private telecom industries) ஒரே நேரத்தில் சொல்லி வைத்தார் போல, ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் போஸ்ட்பைட் (Postpaid) மற்றும் ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்களின் விலைகளை சகட்டுமேனியாக உயர்த்தியுள்ளன. இதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள், இப்போது மிகவும் மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தின் பக்கம் தாவ துவங்கியுள்ளனர்.

ஆடிப்போன Jio, Airtel, Vi.. தமிழ்நாட்டில் BSNL 5G ரெடியா?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி சேவை (Bharat Sanchar Nigam Limited 4G and 5G):

இதன் மூலம் இரண்டே வாரங்களில் பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை டாப் லெவலில் உயர்ந்துள்ளது. டாப் லெவல் என்று சொல்ல காரணம் இருக்கிறது மக்களே. ஏனெனில், இரண்டு வாரங்களில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் நெட்வொர்க்கின் கீழ் சுமார் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை (BSNL new customers) புதிதாக சேர்த்துள்ளது. இரண்டே வாரங்களில் அதிகளவு புதிய பயனர்களை பெற்ற நிறுவனமாக BSNL மாறியுள்ளது.

அதேபோல், விலை ஏற்றத்தை துளி அளவு கூட ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் கடுப்பான பயனர்கள் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் (Private telecom companies) இருந்து BSNL நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை நாட்களாக BSNL நிறுவனத்தை குறை கூறி வந்த மக்கள் அனைவரும், இப்போது BSNL நிறுவனத்தை புகழாரம் சூட்டி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தற்போது பிஎஸ்என்எல் இந்தியாவின் பல இடங்களில் அதன் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. விரைவில் இன்னும் 1000 புதிய பிஎஸ்என்எல் 4ஜி டவர்களை சென்னை (New BSNL 4G towers in Chennai) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களிலும் வேகமாக இன்னும் பல ஆயிரம் புதிய டவர்களை பிஎஸ்என்எல் நிறுவவுள்ளது என்று அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) மற்றும் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G):

இந்த புதிய அறிவிப்பின் மூலம், பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) இன்னும் 6 மாத காலங்களுக்குள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பயன்படுத்த கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) கிடைக்க குறைத்து 9 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை ஆகலாம் என்று பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் இந்தியா முழுக்க அதன் 4ஜி சேவையை நடைமுறைக்கு கொண்டுவரும். அதேபோல், இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 4ஜி டவர்களில் இருந்தே 5ஜி நெட்வொர்க்கை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தையும் பிஎஸ்என்எல் மற்றும் டாடா சேர்ந்து உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BSNL டெலிகாம் துறைக்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளது. இது தனியார் நிறுவனங்களுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G and 5G Launching Soon In Chennai Tamil Nadu India When We Can Expect BSNL 5G Service
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X