BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

|

அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), இந்தியாவில் தனது 4ஜி மற்றும் 5ஜி (BSNL 4G and 5G) சேவையை எப்போது தொடங்க உள்ளது என்பதற்கான உறுதியான தகவலை இப்போது வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரலில் அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, BSNL நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறது.

அதேபோல், BSNL 5ஜி இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான தேதியையும் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

BSNL 4G மற்றும் 5G இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?

BSNL 4G மற்றும் 5G இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?

தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களால் 5G சேவைகள் வெளியிடப்படும் காலகட்டத்தில், BSNL நிறுவனம் தனது 4G சேவையை இந்தியாவில் மிகவும் விரைவாக அறிமுகம் செய்யவிருக்கிறது என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.!

சமீபத்தில் வெளியான தகவலின் படி, BSNL 4G ஜனவரி 2023 இல் வெளியிடப்படும் என்றும், சந்தாதாரர்களுக்கு 4ஜி விரைவில் கிடைக்கும் என்றும் வைஷ்ணவ் தெரிவித்தார்.

எதிர்பார்த்தைவிட சூப்பர் பாஸ்ட் ஆக களமிறங்கும் BSNL 5G.!

எதிர்பார்த்தைவிட சூப்பர் பாஸ்ட் ஆக களமிறங்கும் BSNL 5G.!

BSNL 5G அறிமுகம் பற்றிப் பேசுகையில், BSNL அதிரடியாகத் தனது 5ஜி சேவையையும் 2023 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

BSNL 5ஜி சேவையை இந்திய மக்கள் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கலாம் என்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கூறியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், BSNL 5ஜி அறிமுகம் செய்யப்படும் தேதியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

BSNL 4G ஜனவரி 2023 இல் அறிமுகமா? உறுதியா?

BSNL 4G ஜனவரி 2023 இல் அறிமுகமா? உறுதியா?

முதலில் BSNL நிறுவனம் பொதுமக்களுக்கான 4ஜி சேவையை வரும் ஜனவரி 2023 முதல் இந்தியாவில் உள்ள சந்தாதாரர்களுக்குக் கிடைக்கச் செய்யும் என்று உறுதியளித்துள்ளது.

தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், அடுத்த ஆகஸ்ட் 2023-க்குள், அரசாங்க ஆதரவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL பொதுமக்களுக்கு தேவையான 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை குறைந்த விலையில் வழங்கத் துவங்கும் என்றும் கூறியுள்ளார்.

BSNL 5G

BSNL 5G "இந்த" தேதியில் தான் அறிமுகமா? இதை யாரும் நம்ப மாடீங்க.! ஆனா உண்மை.!

ஆகஸ்ட் 15, 2023 ஆம் தேதி முதல் இந்தியாவில் BSNL 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்று வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், BSNL நிறுவனம் அதன் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் மூலம் இந்தியாவில் குறைந்தது 20 கோடி பயனர்களை, BSNL உடன் சேர்க்கும் என்றும் அவர் எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.

5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

2023-ல் பிரைவேட் நெட்வொர்க்கில் இருந்து அதிக மக்கள் BSNL-க்கு மாறுவர்களா?

2023-ல் பிரைவேட் நெட்வொர்க்கில் இருந்து அதிக மக்கள் BSNL-க்கு மாறுவர்களா?

BSNL இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ததும், பொதுமக்கள் நிச்சயமாக BSNL இன் குறைந்த விலை திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, பிரைவேட் நெட்வொர்களில் இருந்து அரசு நடத்தும் BSNL நெட்வொர்க்கிற்கு மாற்றமடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு கணிப்பு கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் மலை பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு BSNL 4ஜி புதிய அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

நம்ப முடியாத வளர்ச்சியை எட்டி பறிக்க துடிக்கிறது BSNL.!

நம்ப முடியாத வளர்ச்சியை எட்டி பறிக்க துடிக்கிறது BSNL.!

10 வருடங்களாக 3ஜி வேகத்தில் இன்டெர்ன்ட் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனர்களுக்கு 4ஜி வேகம் உண்மையில் பிரமிப்பு அடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

4ஜி அறிமுகம் செய்யப்படும் அதே கையோடு, ஒரு சிறிய கால இடைவெளியில் BSNL 5ஜி வேகத்தையும் மக்களுக்கும் காண்பிக்கும் என்பதனால், டெலிகாம் துறையில் புதிய போட்டியை BSNL உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!

BSNL 4G மற்றும் 5G மக்கள் ஆதரவை பெறுமா?

BSNL 4G மற்றும் 5G மக்கள் ஆதரவை பெறுமா?

எது எப்படியாக இருந்தாலும், வருகின்ற 2023 ஆம் ஆண்டு BSNL பயனர்களுக்குச் சிறப்பான வருடமாக அமையப் போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

BSNL ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் ஏற்கனவே மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட குறைவாக இருப்பதனால், 4ஜி திட்டங்களின் விலையும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் எதிர்பார்க்கும் விலையில் BSNL 4ஜி கிடைத்தால், மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் அடுத்த ஆண்டு பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
BSNL 4G and 5G Launch Date In India Got Confirmed By Telecom Minister Ashwini Vaishnaw

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X