BSNL சிம் இருக்குல? இனிமே சிங்க நடை போடப்போறீங்க! ரூ.89,047 கோடி ஒதுக்கீடு! 4ஜி எதுக்கு 5ஜியே வருது!
இந்தியாவில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு பின் 5ஜி சேவைக்கே போய்விட்டனர். ஆனால், டெலிகாமில் கொடிக்கட்டிப் பறந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் "எப்போ எப்போ" என்று காத்திருந்து துவண்டுபோய்விட்டனர். இவர்களுக்கான சிங்கப்பாதை இன்றே தொடங்கிவிட்டது.
மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை காப்பாற்றவும், மிகப்பெரிய டெலிகாம் சேவையை வழங்கிய நிறுவனம் என்பதை மீண்டும் நிரூபிக்கவும் மத்திய அரசு வரலாற்று முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது மட்டுமல்லால், அலைக்கற்றைகளை ஒதுக்கி ரூ. 89,047 கோடியை செலவுக்காக விடுவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனமாக கொடிக்கட்டி பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம், அனைத்து மாநிலங்களிலும் தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்த்தது. சொல்லப்போனால், இன்றளவும் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் செல்ல முடியாத தொலைத்தூர குக்கிராமங்களிலும் கூட பிஎஸ்என்எல் சேவை கிடைக்கும். இதனாலேயே கோடிக்கணக்கான மக்கள் பிஎஸ்என்எல் மீது கொண்ட மதிப்பின் அடையாளமாக வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறாமல் இருந்து வருகின்றனர்.
இருப்பினும், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் 4ஜி சேவையை தொடங்கியதில் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இப்போது, 5ஜி சேவைக்கே மற்ற நிறுவனங்கள் மாறிவிட்டன. ஆனால், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் சமூக வலைதளங்களில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை மற்ற டெலிகாம் வாடிக்கையாளர்கள் கிண்டலடிக்கும் செயலையும் பார்த்திருப்போம்.
இப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு பிரம்மாண்ட ஒப்புதலை அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3ஆவது புனரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக மத்திய அதிகரித்துள்ளது. இந்த முடிவு, நாட்டின் குக்கிராமங்கள் வரையில் தொலைத்தொடர்பு சேவையை கொண்டு செல்லும் நோக்குடன் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எந்தெந்த அலைவரிசைக்கு (Band) எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ரூ. 46,338 கோடிக்கு 700 MHz அலைவரிசை, ரூ. 26,184 கோடிக்கு 3300 MHz அலைவரிசை, ரூ. 6,564 கோடிக்கு 26 GHz அலைவரிசை, ரூ. 9,428 கோடிக்கு 2500 MHz அலைவரிசை என மொத்தம் ரூ.89,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் இதர செலவுகள் ரூ.531 கோடியும் அடங்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications