Home
News

BSNL அதிரடி.. இனி இந்த பகுதிகளில் 3G சேவை எடுக்காது.. சொன்னபடி சேவை துண்டிப்பு.. இனி மக்கள் என்ன செய்வாங்க?

பிஎஸ்என்எல் (BSNL) என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் இந்தியாவில், ஜனவரி 15 முதல் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதன் 3G சேவையை முற்றிலுமாக துண்டிப்பதாக முன்பே அறிவித்திருந்தது. சொன்னதை சொன்னபடியே செய்து காட்டுவோம், என்று BSNL நிறுவனம் தற்போது சில குறிப்பிட்ட பகுதியில் வழங்கப்பட்டு வந்த பிஎஸ்என்எல் 3ஜி (BSNL 3G) சேவையை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே.

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் (telecom) தனது 4G நெட்வொர்க்கை இந்தியா முழுக்க மிகவும் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இதற்கான விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது சில பகுதிகளில் பயன்படுத்த கிடைத்து வந்த 3ஜி சேவையை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.

BSNL அதிரடி.. இனி இந்த பகுதிகளில் 3G சேவை எடுக்காது.. சேவை துண்டிப்பு

BSNL அதிரடி.. இனி இந்த பகுதிகளில் 3G சேவை எடுக்காது.. சொன்னபடி சேவை துண்டிப்பு:

இது அதிரடி முடிவால், பல மில்லியன் கணக்கான BSNL வாடிக்கையாளர்கள் தற்போது சில பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, 3ஜி சேவையின் கீழ் இயங்கி வந்த பிஎஸ்என்எல் சிம் கார்டு பயனர்களுக்கு இனி இணைய சேவை கிடைக்காது (BSNL no internet service in 3G circle areas) என்பது போன்ற பொதுவான சிக்கல்களை வாடிக்கையாளர்கள் தற்போது சந்தித்து வருகின்றனர். இதை பொதுமக்கள் எப்படி சரி செய்துகொள்ளலாம் என்ற தகவலையும் BSNL வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்கு மேம்பட்ட இணைப்பை உறுதியளிக்கும் வகையில், ஜூன் மாதத்தில் BSNL தனது 4G சேவையை நாடு தழுவிய அளவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, பிஎஸ்என்எல் 3ஜி சேவையின் கீழ் இயங்கும் வட்டங்களை (BSNL plans to reduce 3G circles under it wing) படிப்படியாக குறைத்து வர BSNL நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜனவரி 15 முதல் BSNL 3G சேவை கட்:

அந்த நடவடிக்கையின் முயற்சியாக ஜனவரி 15 முதல் (January 15, 2025) கீழ் காணும் பகுதியில் 3G சேவை இனி இயங்காது (BSNL stopped 3G service from today) என்று அறிவித்துள்ளது. பீகார் தொலைத்தொடர்பு வட்டத்தில், BSNL தனது 3G சேவையை ஜனவரி 15 ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்துகிறது. தலைநகர் பாட்னா உட்பட பல மாவட்டங்களில் நிறுவனம் ஏற்கனவே 4G சேவைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் போது, ​​மோதிஹாரி, கட்டிஹார், ககாரியா மற்றும் முங்கர் போன்ற பகுதிகளில் 3G சேவைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளன.

இப்போது, ​​இந்த சேவை நிறுத்தம் பாட்னா (Patna) உட்பட மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று BSNL அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குறிப்பாக 3G சிம் கார்டுகளை (3G SIM card) நம்பியுள்ள பயனர்களை பாதிக்கும். BSNL 3G சேவை நிறுத்தப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் டேட்டா பயன்பாட்டில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் சிம் கார்டுகளை 4G சேவைக்கு மேம்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து BSNL இணைய சேவையை பயன்படுத்த மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பிஎஸ்என்எல் 4ஜி/5ஜி சிம்களுக்கு (BSNL 4G / 5G SIM card) தற்போதைய 3ஜி சிம் வாடிக்கையாளர்கள் (BSNL 3G SIM customers) இலவசமாக மாறிக்கொள்ளலாம். BSNL பயனர்கள் தங்கள் அருகிலுள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ் அல்லது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, புதிய BSNL 4G / 5G சிம் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீகாரில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பிற தொலைத்தொடர்பு வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அதன் 3ஜி சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 3G Service Will Stop Working From January 15 2025 Today Check Regions On The List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X