BSNL கிங்கு.. 395 நாளுக்கு ஒரே பிளான்.. தினமும் ரூ.6 போதும்.. குடும்பம் குடும்பமா ரீசார்ஜ் செய்கிறார்கள்..
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவில் மிகமிக குறைந்த விலையில் 395 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 2GB டேட்டா, தினசரி 100 SMS போன்றவற்றை வழங்கும் சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தினமும் பிஸ்கட் பாக்கெட் வாங்கும் 6 ரூபாய் செலவில், 13 மாதங்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை பிஎஸ்என்எல் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு நம்பகமான டெலிகாம் ஆபரேட்டராக (trusted Telecom operator) பிஎஸ்என்எல் தற்போது முன்னேறி உள்ளது. இதுவரை இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வந்த ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் விஐ (Vi) என்று பெயர் மாற்றப்பட்டுள்ள வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றம் காரணமாக மக்களின் நம்பிக்கை சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.

குடும்பம் குடும்பமா ரீசார்ஜ் செய்கிறார்கள்.. 395 நாளுக்கு ஒரே BSNL பிளான்:
இந்த வாய்ப்பை பிஎஸ்என்எல் மிக சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை கவரும் நோக்கத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் இப்போது அதிக நன்மைகளை வாரி வழங்கும் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் குறிப்பிட்டு கூறும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்க விலையில் 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கியுள்ளது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரையில், அவற்றின் 1 வருட திட்டங்கள் எல்லாம் ரூ. 4000 விலை பிரிவில் வருகிறது. ஆனால், பிஎஸ்என்எல் மட்டுமே ரூ. 3000 விலைக்குள் 13 மாதங்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி மக்களை கவர்ந்துள்ளது. நாம் பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது, பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan) என்ற பெயருடன் வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan):
இந்த பிஎஸ்என்எல் திட்டம் 395 நாளுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (validity) வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்கப்படும். இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்குமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.
இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மையாக ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஜிங் மியூசிக் (Zing Music), மற்றும் பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) ஆகிய நன்மையை 395 நாட்களுக்கு வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ 2999 திட்டம் ( BSNL Rs 2999):
ஒருவேளை இந்த திட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மை போதவில்லை என்றாலோ, நீங்கள் பிஎஸ்என்எல் வழங்கும் BSNL Rs 2999 திட்டத்தை தேர்வு செய்யலாம். இதில் தினசரி 3GB டேட்டா நன்மை கிடைக்கிறது. மேற்குறிய மற்ற நன்மைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை, இருப்பினும் இதில் கூடுதல் நன்மைகள் மட்டும் எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது 365 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications








