BSNL என்ன மனுஷன்யா நீ.. ஒரே பிளான் ஓஹோன்னு மாறுது வாழ்கை.. BSNL அள்ளித்தரும் ஏராளமான நன்மைகள்? எந்த திட்டம்?
இந்தியாவில் யாருமே வழங்க முடியாத விலையில் 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது வழங்கியுள்ளது. இது ஒரு வருடாந்திர திட்டமாகும். வருடாந்திர திட்டமா? ஒரு வருடத்திற்கே 365 நாட்கள் தானே, இது என்ன 395 நாட்களுக்கு ஒரு வருடாந்திர திட்டமா? என்று சிலர் அறிவாக கேள்வி எழுப்பலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேலான செல்லுபடியுடன் வழங்குகிறது. 365 நாட்களுக்கு மேல் கூடுதலாக கிடைக்கும் வேலிடிட்டி உங்களுக்கு முழுக்க முழுக்க இலவசமானது. இந்த திட்டத்தின் விலை மற்றும் முழு விபரம் இதோ.
என்னது ஒரு வருடத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமா? என்று உங்களில் சிலர் வியந்து கூட கேட்கலாம். ஆம் மக்களே, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் நேரத்தில், ஒரு படி மேலே சென்று, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ஒரு மெகா சூப்பர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

BSNL என்ன மனுஷன்யா நீ.. ஒரே பிளான் ஓஹோன்னு மாறுது வாழ்கை:
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மக்களை தன் வசம் ஈர்ப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இந்த வரிசையில், தற்போது BSNL நிறுவனம் அதிக வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்திருக்கும் புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan).
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் பட்டியலில் அதிக நன்மைகளை அடக்கிய திட்டங்களில் ஒரு சிறந்த திட்டமாக இந்த பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் திகழ்கிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இது அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இதில் நேஷனல் ரோமிங் சேவையும் இலவசமாக கிடைக்கிறது.
அடுத்தபடியாக, இந்த BSNL Rs 2399 Plan இல் உங்களுக்கு தினமும் 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. தினசரி வரம்பு முடிந்த பிறகு டேட்டாவின் வேகம் 40Kbps ஆக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மிதமான வேகத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலமான 395 நாட்களுக்கும் இந்த சேவையை நீங்கள் அனுபவிக்கலாம்.
ஒரே பிளானில் ஓஹோன்னு மாறுது வாழ்க்கை.. BSNL அள்ளித்தரும் ஏராளமான நன்மைகள்:
இது பெரு நீண்ட கால செல்லுபடியாகும் திட்டம் என்பதனால், இந்த வாடிக்கையாளர்களை குஷி அடைய செய்யும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இத்துடன் பல இலவச நன்மைகளையும் வழங்குகிறது. இதன் படி, இந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் மக்களுக்கு, பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon &Astrotell),
கேமியம் (Gameium), லிஸ்டன்பாட்காஸ்ட் (Lystnpodcast), ஸிங்க் (Zing), வாவ் என்டர்டைன்மெண்ட் (wow Entertainment) போன்ற இலவச நன்மைகள் 395 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டம் சரியாக 1 முழுமையான வருடத்திற்கு செல்லுபடியை வழங்குவதோடு, கூடுதலாக 1 மாத செல்லுபடியையும் சேர்த்து வழங்கி, மொத்தமாக 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ரீசார்ஜ் செய்ய கிடைகிறது.


Click it and Unblock the Notifications








