Home
News

BSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா?

பி.வி 365 திட்டத்தின் விலை ரூ .365 மற்றும் இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இதன் வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்

அரசுக்கு சொந்தமான பாரத சஞ்சார் நிகம் லிமிடெட்(பிஎஸ்என்எல்) தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எலல் நிறுவனம் வழங்கிய ரூ.365 திட்டம் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா

பிவி 365 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இணையம் முடிந்த பிறகு 80 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 60 நாட்களுக்கு ஒரு நாளுக்கு 250 நிமிடங்கள் என வழங்கப்படுகிறது. அதோடு பயனர்களுக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும்.

ரிங்பேக் டோன் நன்மைகள்

ரிங்பேக் டோன் நன்மைகள்

அதோடு முதல் இரண்டு மாதங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோன் நன்மைகள் வழங்கப்படும். 60 நாட்கள் முடிந்த பிறகு வரம்பற்ற குரல் மற்றும் இணைய சேவை பெறுவதற்கு அதற்கான வவுச்சர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்கள்

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்கள்

இந்த பிவி 365 திட்டமானது சென்னை தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்களில் இந்தியா முழுவதும் உள்ள பல பிஎஸ்என்எல் வட்டங்களில் கிடைக்கிறது.

ஒரு புதிய சலுகை

ஒரு புதிய சலுகை

இதற்கிடையில், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அவர்களின் ப்ரீபெய்ட் திட்ட செல்லுபடியை ரூ.2 க்கு நீட்டிக்க உதவும். உங்கள் திட்டத்தின் செல்லுபடியாகும் கடைசி நாளில் உங்கள் எண்ணுக்கு ரூ.2 ரீசார்ஜ் செய்யலாம். இதன்மூலம் பிஎஸ்என்எல் ஒரு சலுகை காலத்தை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் மூன்று நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கிறது.

ரூ.1,599 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் பிளான்

ரூ.1,599 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் பிளான்

முன்னதாக, பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.1,599 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்களை ஒடிசா வட்டத்தில் அறிமுகப்படுத்தியது. ரூ .1,599 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் 425 நாட்கள் செல்லுபடியாகும். இதில் வரம்பற்ற பிஎஸ்என்எல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக தரவு மற்றும் இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 1,500 நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 365 planat Rs 365 and offers unlimited voice calling and 2GB data per day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X