Home
News

ஒரே ரீசார்ஜ் போதும்.. 1 வருடத்திற்கு நோ டென்ஷன்.. பட்ஜெட் விலையில் சூப்பரான BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2024-க்கான, ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி கொடுக்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரே ரீசார்ஜ் போதும்.. சூப்பரான BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 600ஜிபி லம்ப்சம் டேட்டா (lumpsum data) கிடைக்கிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content), ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.2339 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட்(Eros Entertainment) மற்றும் லோக்தூன் (Lokdhun) சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.2339 ப்ரீபெய்ட் திட்டம்.

ஒரே ரீசார்ஜ் போதும்.. சூப்பரான BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனமும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட்திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் கம்மி விலையில் இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது.

ஒரே ரீசார்ஜ் போதும்.. சூப்பரான BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 75 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும். இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 365 Days Validity Prepaid Plans for 2024: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X