Home
News

BSNL கதையே வேற.. மாதாந்திரம் ரூ.200 போதும்.. 365 நாள் வேலிடிட்டி, 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களில் கிடைக்கும் திட்டங்களின் விலையை பார்த்தால், கண்டிப்பாக பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டை வாங்கிவிட வேண்டும் என்று பலருக்கு தோன்றலாம். ஏனென்றால், தனியார் டெலிகாம் நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு பிஎஸ்என்எல்லில் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி பட்டையை கிளப்புகிறது.

தனியார் டெலிகாம் நிறுவனங்களில் தினசரி டேட்டாவுடன் வருடம் முழுவதும் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ.3599 திட்டத்துக்கே செல்ல வேண்டும். இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டங்கள் (Yearly Plans) கிடையாது. ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனமானது, ரூ.2399 விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.

BSNL கதையே வேற.. மாதாந்திரம் ரூ.200 போதும்.. 365 நாள் வேலிடிட்டி!

அதோடு தினசரி டேட்டாவை கொடுக்கிறது. 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், ஒரு மாதத்துக்கு கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.199 மட்டுமே செலவாக இருக்கிறது. ஆகவே, ரூ.200 மாதாந்திர செலவில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை பெற கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது சரியாகவே இருக்கும்.

ஒரு வருடத்துக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், தினசரி டேட்டா (Daily Data) போஸ்ட் டேட்டா (Post Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஜியோ, ஏர்டெல்லில் கிடைக்கும் கூடுதல் சலுகைகளை இதில் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், விலை மலிவாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் (BSNL Rs 2399 Plan): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 4 சலுகைகள் மட்டுமே கிடைக்கும். அதாவது, டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டா ஆகிய சலுகைகளை தவிர வேற சலுகைகள் கிடைக்காது. ஓடிடி, ஏஐ சந்தா உள்ளிட்ட சலுகைகளை இதில் எதிர்பார்க்க முடியாது. இதை ரீசார்ஜ் செய்த பிறகு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

வருடம் முழுவதும் ஆக்டிவில் இருக்கும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தி கொள்ள கிடைக்கும். இந்த டேட்டா தீர்ந்து போன பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 730 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முடியும்போது பயன்படுத்தி இருக்க முடியும். இதுபோக போஸ்ட் டேட்டாவும் இருக்கிறது.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்ளை செய்து கொள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டம் சலுகையை கொடுக்கிறது. வாய்ஸ் கால்கள் வழக்கம்போல கிடைக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் வருடம் முழுவதும் கிடைக்கும்.

இதைவிட வேறு சலுகைகளை கஸ்டமர்கள் எதிர்பார்க்க முடியாது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் விலை அதிகமாக இருந்தாலும், அதில் ஓடிடி சலுகைகள் கிடைக்கும். மேலும், கிளவுட் ஸ்டோரேஜ், ப்ரீ ஹெலோ டியூன்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படும். ஆகவே, விலை கூடுதலாக இருப்பதில் ஆச்சரியம் கிடையாது. ஆனால், பட்ஜெட் பிரியர்களுக்கு பொருத்தமாக இருக்காது.

கூடுதல் சலுகைகள் ஏதும் வேண்டாம். சிம் கார்டு தொடர்ந்து ஆக்டிவில் இருக்க வேண்டும். வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் கிடைக்க வேண்டும். தேவைப்படும்போது பயன்படுத்தினாலும் போதுமான டேட்டா இருக்க வேண்டும் என்று கேட்டால், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களைவிட பிஎஸ்என்எஸ் சரியாக விருப்பமாக இருக்கும். இதைவிட மலிவான விலைக்கும் வருடாந்திர திட்டம் இருக்கிறது.

ரூ.1999 விலைக்கு 330 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ரூ.1499 விலைக்கு 300 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 32 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 10 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL 365 Days Validity Plan At Rs 200 Monthly Cost With 2GB Per Day Data Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X