BSNL-க்கு சுத்தி போடணும்.. மலிவு விலையில் 336 நாள் பேக்.. Jio, Airtel, Vi கண்ணுலாம் BSNL மேல.. எந்த திட்டம்?
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மிகவும் சிக்கனமான மற்றும் நீண்ட கால செல்லுபடியை குறைந்த விலையில் வழங்கி, அதன் ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் மக்களின் மனதில் புதிய நம்பிக்கை பெற்ற டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் (BSNL) வளர்ந்துள்ளது. மக்களின் பல்வேறு தேவைகளை அதிக செலவின்றி பூர்த்தி செய்யும் ஒரே நெட்வொர்க்காக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் மாறியுள்ளது. இப்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் 336 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு அசத்தல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அது பற்றிய விபரங்கள் இதோ.
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது போல, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திடீர் விலை அதிகரிப்பு காரணமாக தொலைதொடர்பு சந்தையில் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்த கேப்பில் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலை திட்டங்களை அதிக வேலிடிட்டி மற்றும் நன்மையுடன் வழங்கி அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

பிஎஸ்என்எல் 336 நாள் வேலிடிட்டி திட்டம் (BSNL 336 days validity plan):
அந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 336 days validity plan) கொண்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (BSNL prepaid recharge plan). இந்த 336 நாள் செல்லுபடியாகும் திட்டம், பிஎஸ்என்எல் ரூ. 1499 பிளான் (BSNL Rs 1499 Plan) என்ற பெயருடன் வருகிறது.
இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 1499 திட்டம் (BSNL Rs 1499 Plan) 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்கான ஒரு மகத்தான திட்டம் தான் இந்த 336 நாள் செல்லுபடியாகும் திட்டம். இந்த திட்டம் ஏறக்குறைய 11 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 11 month validity plan) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் 11 மாத செல்லுபடி கிடைப்பது மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 1499 திட்டம் (BSNL Rs 1499 Plan):
இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 1499 பிளான் (BSNL Rs 1499 Plan) நன்மைகள் பற்றி பேசுகையில், இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிற்கு அழைப்பு மேற்கொண்டாலும் அது இலவச அன்லிமிடெட் அழைப்பாக (unlimited voice calls) இணைக்கப்பட்டும். இந்த திட்டம் 336 நாட்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது.
டேட்டா நன்மை பற்றி பேசுகையில், இந்த திட்டம் மொத்தமாக 24GB டேட்டா (data benefits) நன்மையை வழங்குகிறது. ஒவ்வொடு மாதமும் BSNL நிறுவனம் இந்த திட்ட பயனர்களுக்கு 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. கூடுதல் டேட்டா தேவைக்கு உங்களுக்கு ஏற்ற பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் (BSNL data vouchers) செய்துகொள்ளலாம். இந்த திட்டம் பெரியளவில் டேட்டா நன்மை தேவைப்படாத மற்றும் அதிகமாக வாய்ஸ் கால் சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது.


Click it and Unblock the Notifications