Home
News

BSNL-ஆ கொக்கா.. ஒரே ரீசார்ஜ் ஓஹோன்னு வாழ்க்கை.. மாதாந்திரம் ரூ.181 செலவில் 330 நாட்கள் வேலிடிட்டி!

சமீபத்தில் பான்-இந்தியா அடிப்படையில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ள பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கீழ் இந்தியாவிலேயே மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது என்று கூறினால், அது மிகையாகாது. அப்படியான ஒரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

அது 330 நாட்கள் என்கிற மிகவும் நீளமான வேலிடிட்டியை கொண்ட ஒரு பட்ஜெட்-பிரெண்ட்லி திட்டமாகும். மாதாந்திரம் ரூ.181 என்கிற செலவின் கீழ் 11 மாதங்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை ரூ.1999 ஆகும். அக்டோபர் 15 ஆம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த திட்டத்தின் மீது 2% தள்ளுபடி கிடைக்கும் ஒரு ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL-ஆ கொக்கா.. மாதாந்திரம் ரூ.181 செலவில் 330 நாட்கள் வேலிடிட்டி!

இந்த 2% தள்ளுபடி ஆனது பிஎஸ்என்எல் வலைத்தளம் (BSNL Website) அல்லது பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும். ரூ.1,999 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச நேஷனல் ரோமிங் உட்பட இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்கை வழங்குகிறது

டேட்டாவை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 1.5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது 330 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் இந்த திட்டத்திடம் இருந்து மொத்தம் 495 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1999-ன் கீழ் பிஐடிவி ஆப்பிற்கான (BiTV App) இலவச பேஸிக் சந்தாவும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் இதே போன்ற நன்மைகளுடன் மாதாந்திர அடிப்படையில் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை தேடுகிறீர்கள் என்றால் - 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.225 திட்டம் உள்ளது. இது அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா (அதன் பிறகு இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறையும்) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்

இதேபோல ரூ.229 மற்றும் ரூ.228 திட்டங்களும் உள்ளன. இவைகள் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 1 மாதத்திற்கு வழங்குகின்றன. ரூ.200 க்குளான திட்டத்தை தேடினால் நீங்கள் ரூ.199-ஐ கருத்தில் கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் (BSNL Chennai Telephones) நிறுவனம் ஆனது உள்ளூர் சந்தாதாரர்களுக்கான இசிம் சேவைகளை (eSIM Services) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கூடவே ஸ்டார்ஹப் சிங்கப்பூர் (StarHub Singapore) உடன் இணைந்து எல்டிஇ (LTE) வழியிலான சர்வதேச ப்ரீபெய்ட் ரோமிங்கை (International prepaid roaming) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கிடைக்கும் இசிம் சேவை ஆனது பிஸிக்கல் சிம் கார்டுகளுக்கான தேவையை நீக்குகிறது. இசிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களில் நேரடியாக உட்பொதிக்கப்படும் இசிம் ஆனது எளிதான ஆக்டிவேஷன், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒரே டிவைஸில் மல்டிபிள் ஆபரேட்டர் ஃப்ரொபைல்களை ஹோஸ்ட் செய்யும் திறனை உறுதியளிக்கிறது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான ஸ்மார்ட்போன்களை (அதாவது இசிம் ஆதரவு உடனே டிவைஸ்களை கொண்டுள்ள) வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இன் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலமாகவோ இசிம் வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL 330 Days Validity Plan Rs 1999 Prepaid Recharge 2 Percent Discount Offer Ends October 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X