Home
News

BSNL மாஸ்டர் பிளான்.. ரூ. 300 விலையில் 65 நாள் வேலிடிட்டி.. 400+ லைவ் TV சேனல்கள்.. எந்த திட்டம்? என்ன நன்மை?

இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மற்றும் இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் சிரமமான ஒரு ஆண்டாக மாறிவிட்டது. காரணம், டெலிகாம் நிறுவனங்கள் திடீரென அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துவிட்டன. ஆனால், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் மட்டும் இன்னும் மலிவு விலையில் சிறந்த திட்டங்களை வழங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இப்போது BSNL நிறுவனம் ரூ. 300 விலை பிரிவில் 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் விபரம் இதோ.

இந்தியாவில் உள்ள அனைத்து வட்ட மக்களும் பயன்பெறும் வகையில் வெறும் 300 ரூபாய் விலை ரேஞ்சில் (BSNL Rs 300 price range plan) 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Validity) ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாய்ஸ் கால் நன்மை, டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை என்று அணைத்து விதமான நன்மைகளும் கிடைக்கிறது.

BSNL மாஸ்டர் பிளான்.. ரூ. 300 விலையில் 65 நாள் வேலிடிட்டி..

BSNL மாஸ்டர் பிளான்.. ரூ. 300 விலையில் 65 நாள் வேலிடிட்டி.. 400+ லைவ் TV சேனல்கள்:

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு (BSNL users) பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை (BSNL prepaid plan) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், மலிவான விலையில் அதிக வேலிடிட்டி நன்மையை எதிர்பார்க்கும் வடிக்கையாளர்களுக்காக BSNL சில திட்டங்களை வழங்கி வருகிறது.

அந்த திட்டங்களில் மிகமிக குறைந்த விலையில் (BSNL low price prepaid plans) வெறும் 300 ரூபாய் விலை ரேஞ்சில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 319 திட்டம் (BSNL Rs 319 Plan). இந்த திட்டம் வெறும் 319 ரூபாய் விலையில் 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 65 days validity plan) உடன் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 319 திட்டம் (BSNL Rs 319 Plan):

ஆம், இந்த திட்டம் உங்களுக்கு வெறும் 300 ரூபாய் விலை புள்ளியியல் 2 மாதங்களுக்கும் அதிகமான வேலிடிட்டியை (BSNL 2 months validity plan) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் 65 நாட்களுக்கும் முழுமையாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் லோக்கல் (local), STD, மற்றும் நேஷனல் ரோமிங் (national roaming) வாய்ஸ் காலிங் சேவையையும் வழங்குகிறது.

இந்த திட்டம் 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்ற பட்ஜெட் திட்டங்களுடன் (BSNL budget plan) கிடைப்பது போல இந்த திட்டத்தில் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை (no daily SMS benefit) என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த திட்டம் வழக்கமாக கிடைக்கும் தினசரி டேட்டா நன்மையை (no daily data benefit) வழங்காது.

அதற்கு மாற்றாக, இந்த திட்டம் 10GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த 10GB டேட்டாவை நீங்கள் 65 நாட்களுக்குள் எந்த தினசரி வரம்பும் இல்லாமல் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதை விட குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 299 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

மலிவு விலையில் தொலைத்தொடர்பு சேவையில் இணைய உங்களிடம் ஒரு BSNL சிம் இருந்தால் போதுமானது. BSNL நிறுவனம் இப்போது அதன் அணைத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடனும் BiTV சேவையை இலவசமாக வழங்குகிறது. இந்த புதிய BiTV சேவையின் கீழ் பயனர்கள் இணைய சேவை இல்லாமல் 400+ லைவ் டிவி சேனல்களை அவர்களுடைய மொபைல் மூலம் கண்டு மகிழும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FAQs
BSNL-ன் புதிய BiTV சேவை என்றால் என்ன?

BiTV சேவை என்பது டைரக்ட்-டு-மொபைல் சேவையாகும். இந்த சேவை மூலம் இன்டர்நெட் தேவையில்லாமல் உங்களால் நேரடியாக 400-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை கண்டு மகிழ முடியும். லைவ் டிவி சேனல் உள்ளடக்கங்களை காண டேட்டா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 
GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 319 Plan With 65 Days Validity Now Provides BiTV 400 Plus Live TV Channels In India Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X