Home
News

வெளுத்துவிட்ட BSNL.. தினசரி 3 ரூபாய் செலவு.. 300 நாளுக்கு வேலிடிட்டி.. செமயான ரீசார்ஜ் பிளான் இதான்..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தற்போது இந்தியாவில் மிகமிக குறைந்த விலையில் நம்ப முடியாத நீண்ட நாள் வேலிடிட்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தினசரி வெறும் 3 ரூபாய்க்கும் குறைவான செலவில், 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த புதிய பிஎஸ்என்எல் 300 நாள் வேலிடிட்டி திட்டம் எந்த வட்டத்தில் எல்லாம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இந்த காலகட்டத்தில் காய்கறி வாங்கிவிட்டு, இலவசமாக கொஞ்சம் கொத்தமல்லி, கருவேப்பில்லை கேட்டால், கடைக்காரர் அதெல்லாம் சும்மா வராது சார், கொத்தமல்லி, கருவேப்பில்லை வேண்டுமென்றால் குறைந்தது 5 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லிவிடும் காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இதற்கு நடுவே, யாரும் தரமுடியாத விலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 3 ரூபாய்க்கும் குறைந்த தினசரி கட்டணத்துடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளுத்துவிட்ட BSNL.. தினசரி 3 ரூபாய் செலவு.. 300 நாளுக்கு வேலிடிட்டி..

வெளுத்துவிட்ட BSNL.. தினசரி 3 ரூபாய் செலவு.. 300 நாளுக்கு வேலிடிட்டி:
உண்மையாகவே இந்த திட்டம் ஒரு நாளுக்கு ரூ. 3 என்ற மலிவான கட்டணத்தை தான் வசூலிக்கிறதா? இந்த புதிய 300 நாள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) யாருக்கெல்லாம் சிறந்தது? இதன் விலை என்ன என்ற விபரங்களை பார்க்கலாம். முதலில் இத்திட்டத்தின் விலை பற்றி பார்க்கலாம். இந்த புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது, பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் வருகிறது.

BSNL தளத்தில் இந்த திட்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சரியாக 10 மாதங்கள் (BSNL 10 month validity plan) வரை முழுமையாக செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. ஆம், நாம் முன்பே சொன்னது போல இந்த திட்டம் 300 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மலிவு விலையில் நீண்ட நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை தேடும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan):
அதேபோல், பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) இரண்டாம் நிலை சிம் (Secondary SIM) ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த் திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இது டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும், பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த முதல் 60 நாளில் உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. அதன் பிறகு, அன்லிமிடெட் டேட்டா நன்மை அடுத்த 240 நாட்களுக்கு 40Kbps வேகத்தில் (40Kbps unlimited data) வழங்கப்படும்.

முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளும் கிடைக்கிறது. மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் சிம் கார்ட் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. இதன் தினசரி கட்டணம் 3 ரூபாய்க்கும் குறைந்ததாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL 300 Days Validity Prepaid Plan At Cost Of Rs 797 Actually Costs Less Than Rs 3 Per Day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X