Home
News

திருப்பு டா வண்டிய BSNL-க்கு.. இனி மாதாந்திரம் ரூ.150 போதும்.. 300 நாள் வேலிடிட்டி, டேட்டா, வாய்ஸ், SMS!

யாரெல்லாம் ஒரு காலத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்தி கொண்டு இருந்தீர்களா அல்லது சமீப காலமாக ரீசார்ஜ் செய்யாமல் வைத்து இருக்கீர்களோ.. அல்லது கம்மி விலைக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை தேடுகிறீர்களா.. அவர்கள் வண்டிகள் எல்லாம் எல்லாம் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பட்டும்!

இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஆனது, மாதாந்திரம் ரூ.150 என்கிற செலவில், 300 நாட்களுக்கு அதாவது 10 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. அது ரூ.1499 மதிப்பிலான ப்ரீபெய்ட் பிளான் ஆகும். இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

BSNL.. மாதாந்திரம் ரூ.150 போதும்.. 300 நாள் வேலிடிட்டி!

உங்களிடம் இரண்டாவது சிம் கார்டு (SIM) இருந்தால், அதற்கும் இத்திட்டம் மிகவும் ஏற்றதாக இருக்கும். மொபைல் சேவைகளின் கட்டணம் அதிகரித்து வரும் சூழலில், பயனர்களுக்கு ஒரு நிவாரணமாக பிஎஸ்என்எல் இத்திட்டத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் போதுமான அளவு டேட்டா நன்மையும் உள்ளது.

ஒருவேளை உங்களுக்கு இதன்கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு மிக அதிகமாக இல்லை என்றாலும், 300 நாட்கள் என்ற நீண்ட கால செல்லுபடியாகும் காலம் (validity) இருப்பதால், பயனர்கள் தேவைப்படும்போது கூடுதல் டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. சரி வாருங்கள் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டம் 300 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (unlimited voice calls), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் 32ஜிபி டேட்டா ஆகியவைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பிட்ட டேட்டா வரம்பு (FUP) தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40 கேபிபிஎஸ் ஆக குறையும். இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு 'பிளான் வவுச்சர்' (plan voucher) என்பதை நினைவில் கொள்க. நிச்சயமாக, அதிக அதிவேக டேட்டாவை வழங்கும் பிற ப்ரீபெய்ட் திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளன.

அவைகளும் நீண்ட கால செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கலாம். சிம் கார்டை செயல்பாட்டில் வைத்திருக்க மட்டும் விரும்பினால், பயனர்கள் மிகக் குறைந்த விலையிலான பிளான் வவுச்சர்கள் மூலமும் ரீசார்ஜ் செய்யலாம்.பிஎஸ்என்எல்-இன் மிகவும் பிரபலமான பிளான் வவுச்சர்களில் இதுவும் ஒன்று என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் இது போன்ற திட்டங்கள் அதிகம் இல்லை. வெறும் ரூ.1499-க்கு 300 நாட்கள் சற்று சர்வீஸ் வேலிடிட்டி மற்றும் பல்வேறு நன்மைகளை பெறுவது பயனர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த பிளான் வவுச்சர்கள், பயனர்கள் தங்கள் சிம் கார்டை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க உதவும். பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவை விரிவாக்கத்துடன், இத்திட்டங்கள் பயனர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

ஒருவேளை நீங்கள் அதிக டேட்டா வழங்கும் பிராட்பேண்ட் சேவையில் இணைய விரும்பினால், பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் திட்டம் ஆனது 200எம்பிபிஎஸ் (Mbbps) என்கிற அதிவேக இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் ஒரு பிராட்பேண்ட் திட்டமாகும். இது நுகர்வோருக்கு மாதத்திற்கு 5000ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே பிரீமியம் ஓடிடி (OTT) நன்மைகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓடிடி நன்மைகளில் ஜீ5, ஹாங்காமா பிளே, ஷீமாரூமீ, எபிக்ஆன், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சோனிலைவ் பிரீமியம் போன்ற தளங்கள் அடங்கும். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை தங்களின் பிராட்பேண்ட் திட்டங்களில் (ஃபைபர் திட்டங்கள் மட்டும்) அதிகபட்சமாக 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டாவை வழங்குவதைக் கருத்தில் கொண்டால், 5000ஜிபி டேட்டா என்பது ஒரு பெரிய அளவாகும்.

மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த 5000ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகும், பயனர்கள் 10 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்துடன் இணைய அணுகலை பெறுவார்கள். பிஎஸ்என்எல்-ன் சூப்பர் ஸ்டார் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.999 மட்டுமே ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து இந்தத் திட்டத்தை பெற நீங்கள் விரும்பினால், நிறுவனத்தின் இணையதளத்திற்கோ அல்லது செல்ஃப் கேர் (Self Care) எனப்படும் மொபைல் ஆப்பிற்கோ நேரடியாக செல்லலாம்.

Best Mobiles in India

English summary
BSNL 300 Days SIM Active Recharge Rs 1499 Plan With 35GB Data Daily 100 SMS Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X