BSNL பயனர்களுக்கு அதிர்ஷ்டம்.. தினம் ரூ. 3 போதும்.. 300 நாளுக்கு பலன்.. பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பு..
கொடுக்குற தெய்வம் குறையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க, அந்த மாதிரி, இப்போ பிஎஸ்என்எல் சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் நெட்வொர்க்கை கிழித்துக்கொண்டு நேரடியாக அவரவர் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த கிடைக்கிறது. இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் இப்போது 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகம் செய்து வியப்படைய செய்துள்ளது.
பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கு ஜாக்பாட்டே அடித்தது போல இப்போது இந்த செய்தி பட்டி தொட்டியெல்லாம் பரவ துவங்கியுள்ளது. இதுவரை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கிடாத மலிவு விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்த 300 நாள் வேலிடிட்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மக்களுக்கான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், மலிவு விலையில் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மற்றும் SMS என்று எல்லாவற்றையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் முழு விபரம் இதோ. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பல புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை (BSNL Prepaid Plan) அறிமுகம் செய்து, மக்களை கவர்ந்து வந்தாலும்.
இந்த புதிய திட்டம் கிராமப்புறம் முதல் நகரம் வரை உள்ள அணைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது என்று தான் நாம் கூற வேண்டும். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் திட்டமானது பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த திட்டம் தினமும் வெறும் 3 ரூபாய் செலவில் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டமாக வெளிவந்துள்ளது.
இந்த திட்டம் 1 வருடத்திற்கு வெறும் 65 நாட்கள் குறைவான செல்லுபடியை வழங்குகிறது. 300 நாட்கள் என்று குறிப்பிடுகையில், இந்த திட்டம் முழுவதுமாக 10 மாதங்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும், இந்த திட்டம் தினமும் வெறும் 3 ரூபாய் செலவில் 300 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.
இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து அடுத்த முதல் 60 நாட்களுக்கு உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மை எந்தவித தடையுமின்றி பயன்படுத்த கிடைக்கும். இந்த திட்டம் அதே முதல் 60 நாட்களுக்கு தினமும் 2GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்கும். இதன் மூலம் இந்த திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது.
இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் வழங்குகிறது. இந்த திட்டம் இலவச நேஷனல் ரோமிங் சேவையுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு நீங்கள் பயன்படுத்த முடியும். இதற்கு பிறகு, வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மையை பயன்படுத்த நீங்கள் பிஎஸ்என்எல் வழங்கும் டாக் டைம் வவுச்சர் மற்றும் டேட்டா வவுச்சர் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
முதல் 60 நாள் சேவைக்கு பிறகு, இந்த திட்டம் அடுத்த 240 நாட்களுக்கு உங்களுடைய பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆக்டிவேட் நிலையில் வைக்க உதவும். அதாவது, உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) 10 முழு மாதங்களுக்கு ஆக்டிவேட் நிலையில் வைக்கப்படும். இந்த 240 நாட்களில் நீங்கள் இன்கம்மிங் அழைப்புகளை தாராளமாக அனுபவித்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications