BSNL சிம் குடுங்க சார் முதல்ல.. மாதம் ரூ.150 க்கு 300 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 32 ஜிபி டேட்டா!
மாதத்துக்கு ரூ.150 செலவில் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டமானது, 300 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. ஜியோவின் வாய்ஸ் ஒன்லி திட்டத்தைவிட மலிவான விலைக்கு சலுகைகளை கொடுக்கிறது. இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் இதோ.
பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) கிடைக்கிறது. சொல்லப்போனால், இது வாய்ஸ் ஒன்லி திட்டமாகவே இருக்கிறது.

இந்த விலையை பார்த்தால், அவ்வளவு மலிவாக இருக்கிறது. ஆனால், இதில் கூடுதலாக டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் 32 ஜிபி டேட்டா கிடைக்கும். 300 நாட்கள் வேலிடிட்டிக்கு இந்த 32 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, வேலிடிட்டி முன்பாக முடித்துவிட்டால், போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கும்.
40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோத நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இதுபோன்ற மலிவு விலை வருடாந்திர திட்டத்தில் தினசரிக்கு எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. மொத்தமாக எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இதை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.
ஆனால், இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு கிடைக்கிறது. இதைவிட கூடுதல் விலைக்கு ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. ஆனால், அதில் டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. இருப்பினும், வேலிடிட்டி கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகைகளை பார்த்தால் தெரியவரும்.
ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1748 Prepaid Plan): முன்னதாக பார்த்த பிஎஸ்என்எல் திட்டத்தைவிட இது கூடுதல் விலைக்கு கிடைக்கிறது. இதற்கு ஏற்ப 36 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இதில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் டேட்டா கிடைக்காது.
ஆகவே, முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல போஸ்ட் டேட்டா சலுகை கூட இந்த ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்காது. இந்த 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) செய்யலாம். ஆனால், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியாது.
மொத்தமாகவே 3600 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதில் பிஎஸ்என்எல் நிறுவனம், மலிவான விலையில் பட்டையை கிளப்புகிறது. உண்மையில் டேட்டாவில் மட்டுமே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை முந்துகின்றன. வெறும் கால்கள் மட்டுமேயானால், பிஎஸ்என்எல் முந்திவிடுகிறது.
மேலும், பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே கொடுத்து வந்தது. இப்போது, 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இப்போது ரீசார்ஜ் செய்தால், 380 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும், 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications
