BSNL என்ன இப்படி இறங்கிட்டீங்க? 300 நாளுக்கு நோ-ரீசார்ஜ்.. தினசரி 3 ரூபாய் போதுமா? மாஸான புது 10 மாத திட்டம்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 300 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் (300 days no recharge plan) என்ற புதிய 10 மாத வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL 10 months validity plan) பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் என்று எல்லா நன்மைகளையும் ஒரே பேக்கில் சில நிபந்தனைகளுடன் சாமர்த்தியமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு தற்போது இந்தியாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதில் நாம் கிள்ளிடா என்று நிரூபிக்கும் விதமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது இந்தியாவில் ஒரு புதிய பிரளயத்தையே உருவாக்கியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian telecom sector) முதல் முறையாக 300 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் என்ற (300 days no recharge plan) அடிப்படையிலான புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL prepaid plan) அறிமுகம் செய்துள்ளது.

BSNL என்ன இப்படி இறங்கிட்டீங்க? மலிவு விலையில் 300 நாளுக்கு நோ-ரீசார்ஜ திட்டமா?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான கடுமையான போட்டியை சமாளிக்க, இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் சமீப காலமாக பல விதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL recharge plan) தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இதில் பல சுவாரசியமான திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் BSNL பக்கம் திரும்பியுள்ளது.
இன்னும் மக்கள் கூட்டத்தை தன் வசம் ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் 10 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் (BSNL 10 Month Prepaid Plan) மிகமிக மலிவான விலை கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 10 மாதம் என்று கூறுகையில், இந்த திட்டம் முழுமையாக 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan):
பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் உங்களுக்கு 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் (300 days validity plan) நீண்ட நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முதல் 60 நாள் காலத்திற்கு நீங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மையை எந்தவித தடையுமின்றி அனுபவிக்க முடியும்.
இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு தினமும் 2GB ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது. அதேபோல், இதில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இலவச நேஷனல் ரோமிங் சேவையுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு கிடைக்கும். இந்த நன்மைகளை BSNL முதல் 60 நாட்களுக்கு மட்டும் வழங்கும் ஒரு சிறப்பு நிபந்தனையை கொண்டுள்ளது.
300 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் நன்மை யாருக்கு பெஸ்ட்?
இதன் பிறகு, அடுத்த 240 நாட்களுக்கு உங்களுடைய பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM card) ஆக்டிவேட் நிலையில் வைக்கப்படும். இதுவே இந்த திட்டத்தின் சிறந்த நன்மையாகும். 240 நாள் சிம் ஆக்டிவ் ஸ்டேட்டஸ் உடன் 60 நாட்களுக்கு வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மையை வழங்கி, மொத்தமாக 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் BSNL நிறுவனம் இந்த திட்டத்தை பிரத்தியேகமாக ஒரு 300 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் திட்டமாக வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.
BSNL சிம் கார்டை இரண்டாம் சிம் ஆக பயன்படுத்துவரக்ளுக்கு இது பெஸ்ட் திட்டம். என்னதான் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகளை இந்த திட்டம் 60 நாட்களுக்கு சுருக்கி வழங்கினாலும், இது மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் தொடர்பில் இருப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
கூடுதல் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளுக்கு நீங்கள் பிஎஸ்என்எல் டாப் அப் (BSNL Top Up) அல்லது பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர்களை (BSNL Data Voucher) பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








