Home
News

Airtel, Jio SIM கதை முடிந்தது.. பழையபடி 30 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. வெறும் ரூ.1 போதும்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் புதிதாக சேரும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் 30 நாட்கள் ஆஃபர் மறுபடியும் பழையபடியே கொடுக்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் இலவமாக கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதி வரையில் மட்டுமே இந்த ஃப்ரீடம் ஆஃபர் (Freedom Offer) கிடைக்கும்.

புதிதாக சிம் கார்டு வாங்கும் டெலிகாம் கஸ்டமர்கள், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு செல்லாமல், அப்படியே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும்படி ஃப்ரீடம் ஆஃபர் கொடுக்கப்பட்டு வருகிறது. இலசமாக கிடைக்கும் பிஎஸ்என்எஸ் சிம் கார்டில் ரூ.1 மதிப்பில் ரீசார்ஜ் செய்தால் போதும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கொடுக்கப்படும்.

Airtel, Jio SIM கதை முடிந்தது.. பழையபடி 30 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Call), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) கொடுக்கப்படும். பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) வாங்கிய உடனேயே ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் ஃப்ரீடம் ஆஃபர் (BSNL Freedom Offer) கிடைக்கிறது. ஆனால், இதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஃப்ரீடம் ஆஃபர் கொடுக்கப்பட உள்ளது. புதிய சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு பிஎஸ்என்எல் போர்டல் அல்லது பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் (BSNL Selfcare App) ஆகியவற்றில் இந்த ரூ.1 ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ஃப்ரீடம் ஆஃபர் ரூ.1 (BSNL Freedom Offer Rs 1): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மாதம் முழுவதும் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு உள்ளது. தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது ப்ரீபெய்ட் திட்டமாக இருப்பதால், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ள முடிகிறது.

இந்த ரூ.1 திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பிறகு அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய காத்திருந்தால், ரூ.299 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் தினசரி டேட்டா கூடுதலாக கிடைக்கும். வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளில் எந்த மாற்றமும் இருக்காது. அதேபோல ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. டேட்டா மட்டும் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. புதிய சிம் கார்டு வாங்கியவுடன் முதலாவது திட்டத்தையும், பிறகு இந்த 2ஆவது திட்டத்தையும் ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். இந்த திட்டங்கள் மலிவான விலைக்கு சலுகைகளை கொடுக்கின்றன. ஜியோ, ஏர்டெல்லில் இந்த சலுகைகளுடன் திட்டங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 30 Days Voice Calls 2GB Data At Rs 1 New BSNL Customers Need To Know This Freedom Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X