Home
News

மார்ச் 31 தான் கடைசி.. அதுக்கு அப்புறம் இந்த 2 BSNL பிளானிலும் 30 நாட்கள் வேலிடிட்டி குறைக்கப்படும்!

இம்மாத தொடக்கத்தில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது 2025 மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடையும் 2 ஆபர்களை அறிவித்து இருந்தது. இதன் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 2 ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் வேலிடிட்டி அணுக கிடைக்கிறது. அதாவது மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே எக்ஸ்ட்ரா வேலிடிட்டி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் பிஎஸ்என்எல்-ன் இந்த ஆபரை நீங்கள் மிஸ் செய்ய விரும்பவில்லை என்றால்.. இன்னும் 1 நாளில் காலாவதியாகவுள்ள இந்த 2 ஆபர்களில் ஒன்றை அணுக விரும்வினால்.. கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் 30 நாட்கள் வரை எக்ஸ்ட்ரா வேலிடிட்டியை பெற விரும்பினால்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

BSNL: மார்ச் 31 தான் கடைசி.. 30 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி!

01. பிஎஸ்என்எல் ரூ.1,499 திட்டத்த்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்: 2025 மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரூ.1,499 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் கூடுதலாக 29 நாட்கள் வேலிடிட்டியை பெறுவார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் தளம் வழியாக அறிவித்துள்ளது.

முன்னதாக 336 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கிய இந்த திட்டம், மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை இயங்கும் ஹோலி பண்டிகை கால சலுகையின் கீழ் - 1 முழு ஆண்டுக்கும் செல்லுபடியாகும் - அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது

மேலும் இலவச நேஷனல் ரோமிங், டெய்லி 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை ரூ.1499 திட்டத்தின் பயனர்கள் மொத்தம் 24 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை பெறுவார்கள். ஒருவேளை டேட்டா லிமிட் தீர்ந்ததும், ரூ.1499 திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

02. பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டத்த்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்: பிஎஸ்என்எல்-ன் ஹோலி பண்டிகை கால சலுகையின் கீழ் வரும் இரண்டாவது திட்டம் - ரூ.2,399 ஆகும். இப்போது இது 425 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது

மேலும் இலவச நேஷனல் ரோமிங், டெய்லி 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை ரூ.2399 திட்டத்தின் பயனர்கள் டெய்லி 2ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை பெறுவார்கள். அதாவது இதன் திட்டத்தின்கீழ் மொத்தம் 850ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதலாக, பிஎஸ்என்எல் அதன் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் BiTV-க்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. இதன்கீழ் பல்வேறு வகையான ஓடிடி ஆப்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை கடந்த 3 மாத காலமாக, தொடர்ச்சியான முறையில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து வந்த பிஎஸ்என்எல், தற்போது மீண்டும் பின்னடைவை சந்தித்துவருகிறது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது பயனர்கள் கொண்டிருந்த கோபத்தின் விளைவாக பிஎஸ்என்எல் நல்ல லாபம் ஈட்டியது.

இருப்பினும், அந்த விளைவு சிறிது காலம் மட்டுமே இருந்தது. 2024 ஜூலை முதல் அக்டோபர் வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தால் புதிய பயனர்களை சேர்க்க முடிந்தது. ஆனால் அதன் பிறகு, மீண்டும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோவின் திரும்ப ஆரம்பித்தனர். இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அனைத்து வயர்லெஸ் பயனர்களையும் தங்கள் வசம் ஈர்த்தன. இதன் விளைவாக விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா நிறுவனத்துடன் சேர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் தன் பயனர்களை இழந்தன.

2 மாதங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பெற்ற பிஎஸ்என்எல், இப்போது 0.64 மில்லியனை இழந்துள்ளது. இந்த தரவுகள் - டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது அதன் மாதாந்திர செயல்திறன் குறிகாட்டி அறிக்கைகளில் பகிர்ந்து கொண்டதில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 30 Days Extra Validity Offer on Rs 1499 and Rs 2399 Ends March 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X