Home
News

80 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக நன்மைகளை வழங்கும் 3 BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

பிஎஸ்என்எல்(BSNL) நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து பல சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 80 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி

80 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் 80 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் மூன்று அருமையான திட்டங்களை வைத்துள்ளது. அதேபோல் இந்த திட்டங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் உள்ளன. இப்போது இந்த மூன்று திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப்
பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 82 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40 Kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 80 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. குறிப்பாக ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் OTT நன்மைகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40 Kbps ஆக குறையும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி100 எஸ்எம்எஸ், இலவச Zing மற்றும் PRBT உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இதுதவிர இலவச Zing சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ

ஜியோ

ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.2999-விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. Jio Rs 2999 prepaid திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல சலுகைகள் இந்த ரூ.2999 திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு Ajio, Netmeds, Ixigo, Reliance Digital மற்றும் Jio Saavn Pro ஆகியவற்றின் கூப்பன்கள் கிடைக்கும்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.749-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. குறிப்பாக ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL 3 Voice Plus Data Plans with 80 Days Validity offering more benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X