Home
News

BSNL பயனர்கள் யாருமே எதிர்பார்க்கல.. 3 முக்கியமான ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்காது.. எப்போது முதல் தெரியுமா?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது informalnewz இணையதளம் வெளியிட்ட தகவலின்படி வரும் பிப்ரவரி 10 2025 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் அதிக நன்மைகளை தரும் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் இப்போதே ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL பயனர்கள் யாருமே எதிர்பார்க்கல.. 3 முக்கியமான ரீசார்ஜ் கிடைக்காது!

பிஎஸ்என்எல்ன் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 797 prepaid plan) டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும், பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

இந்த முதல் 60 நாளில் உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. அதன் பிறகு, அன்லிமிடெட் டேட்டா நன்மை அடுத்த 240 நாட்களுக்கு 40Kbps வேகத்தில் (40Kbps unlimited data) வழங்கப்படும். மேலும் பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளும் வழங்குகிறது. மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் சிம் கார்ட் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது.

BSNL பயனர்கள் யாருமே எதிர்பார்க்கல.. 3 முக்கியமான ரீசார்ஜ் கிடைக்காது!

பிஎஸ்என்எல் ரூ.201 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 201 prepaid plan) ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தில் 300 நிமிட அழைப்பு நன்மைகள் மற்றும் 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். குறிப்பாக சிம் கார்டை நீண்ட நாட்கள் செயலில் வைத்திருக்க இந்த திட்டம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 மற்றும் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகள் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் லைவ் டிவி சேனல் மற்றும் 5ஜி சோதனை எனப் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 3 Prepaid plans will be discontinued on February 10, customers better recharge soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X