BSNL அதிரடி அறிவிப்பு.. 365 நாளுக்கு தினமும் 3GB டேட்டா.. விலையை கேட்டு மிரண்ட Jio.. இவ்வளவு கம்மி விலையா?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவில் அதிரடியாக மலிவு விலையில் புதிய 1 வருட வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL 1 year validity plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் இன்னும் என்னென்ன நன்மைகளை என்ன விலையில் வழங்குகிறது என்று முழுமையாக தெரிந்துகொள்ளலாம். பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்த இந்த திட்டத்தின் விலையை பார்த்து ஜியோவுக்கு (Jio) தூக்கி வாரி போட்டுள்ளது. என்ன காரணம் என்பது இங்கே?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் விஐ (Vi) என்று பெயர் மாற்றப்பட்டுள்ள வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றம் காரணமாக, மக்கள் இப்போது மலிவு விலையில் அதிக நன்மை கிடைக்கும் பிஎஸ்என்எல் பக்கம் மாற துவங்கியுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெரும் விதத்தில், பிஎஸ்என்எல் நிறுவனமும் பல அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது.

BSNL அதிரடி அறிவிப்பு.. 365 நாளுக்கு தினமும் 3GB டேட்டா:
அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan). இந்த திட்டத்தின் விலையை கேட்டதும், இது மலிவு விலையா? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். உண்மையை சொல்ல போனால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இத்தகைய திட்டத்திற்கு 3999 ரூபாய் வரை வசூலிக்கிறது.
அவற்றுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் இன் இந்த 1 வருட வேலிடிட்டி திட்டம் மிகவும் மலிவானதாக கருதப்படுகிறது. சரி, இந்த BSNL 2999 Plan என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். பிஎஸ்என்எல் 2999 திட்டம் தினசரி 3GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) உடன் வருகிறது என்பதனால், இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மொத்தமாக 1095GB டேட்டா நன்மை கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan):
அடேங்கப்பா என்று வியக்கும் அளவிற்கு 1095GB டேட்டா நன்மையை 365 நாட்கள் செல்லுபடியுடன் வழங்கும் ஒரே ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இது மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. தினசரி வரம்பில் உள்ள 3GB டேட்டா முடிந்தவுடன், 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை (unlimited data) வழங்கப்படும். அடுத்தபடியாக, இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்குமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது.
இத்துடன் தினசரி 100 இலவச எஸஎம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற பிரீமியம் திட்டங்களுடன் கிடைக்கும் கூடுதல் இலவச நன்மைகளின் சந்தா இந்த திட்டத்துடன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இப்போது 2024 வருட இறுதியில் இருக்கிறோம், இந்த திட்டத்தை இப்போது ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், உங்களுடைய அடுத்த ரீசார்ஜ் அடுத்த 2025 டிசம்பரில் தான் நிகழும் என்பதனால், இதுவொரு சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








