Home
News

BSNL தந்த அரிய வாய்ப்பு.. பட்ஜெட்ல 395 நாள் பிளான்.. 790GB டேட்டா.. 2025 விலை உயர்வில் இருந்து தப்பிக்க வழி..

இந்த 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் ஒரு விலை ஏற்றம் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதை கட்டாயம் பொதுமக்கள் விரும்ப போவதில்லை. உங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க இப்போதே நீங்கள் முடிவு செய்வது பயனளிக்கும். குறிப்பாக நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் (BSNL) பயனர் என்றால், காரியம் சுலபமாக முடிந்துவிடும். சரி வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் எப்போது வேண்டுமானலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அவர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த திடீர் விலை ஏற்றத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனதின் சிம் கார்டை இப்போது வாங்கி வைப்பது சிறப்பானது.

BSNL தந்த அரிய வாய்ப்பு.. பட்ஜெட்ல 395 நாள் பிளான்.. 790GB டேட்டா..

BSNL தந்த அரிய வாய்ப்பு.. 2025 விலை உயர்வில் இருந்து தப்பிக்க வழி:

காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே இப்போது 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் (395 days validity plan) வேலிடிட்டி திட்டத்தை டெலிகாம் துறையில் வழங்குகிறது. இந்த திட்டம் 790GB டேட்டா நன்மை (BSNL 790GB data plan) வழங்குகிறது. நீண்ட நாள் வேலிடிட்டி உடன் ஒரு பட்ஜெட் பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (super budget friendly BSNL prepaid recharge plan) தேடும் நபர்களுக்கு இது தேர்வாக அமைகிறது.

குறிப்பாக, அடுத்து நடக்கவிருக்கும் ரீசார்ஜ் கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தை நீங்கள் இப்போது ரீசார்ஜ் செய்தால் கூட, அடுத்த 13 மாதங்களுக்கு எந்தவித கவலையும் இல்லாமல் சந்தோஷமாக தொலைத்தொடர்பு சேவையுடன் இணைத்திருக்கலாம். இந்த 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் விலை ஏற்றம் நிகழ்ந்தாலும், இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் நிச்சயம் சில மாதங்கள் தப்பிக்க இயலும் என்று கருதப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan):

சரி, இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம். இந்தியாவின் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), இப்போது தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து , ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களை கதிகலங்க வைத்து வருகிறது.

இதுவரை யாரும் வழங்கிடாத, 1 முறை ரீசார்ஜ் செய்தால் 395 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் (395 days no recharge plan) என்ற 13 மாத வேலிடிட்டி (BSNL 13 months validity) கொண்ட திட்டத்தை BSNL தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. ஆம், 1 வருடத்தை தாண்டி செயல்படும் வகையிலான திட்டமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan) என்ற பெயருடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பட்ஜெட்ல 395 நாள் பிளான்.. 790GB டேட்டா நன்மை:

BSNL 395 days validity plan: இந்த திட்டம் 13 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 13 month validity plan) கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் 2399 பிளான் (BSNL 2399 Plan) 395 நாட்களுக்கு தடையில்லாத அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் நேஷனல் ரோமிங் (national roaming) மற்றும் இலவச இன்கமிங் (free incoming calls) நன்மைகளை 395 நாட்களுக்கு கிடைக்கும் படி செய்துள்ளது.

இந்த திட்டம் தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 790GB டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் ரீசார்ஜ் திட்ட விலை உயர்வில் இருந்து தப்பிக்க, இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், அடுத்த, 395 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் என்ற வகையில் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். அதேபோல், குறைந்த ஒன்று அல்லது மூன்று மாதங்களுக்கு விலை ஏற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கருதப்படுகிறது. இறுதியில் முடிவு உங்களுடையது தான்.

Best Mobiles in India

English summary
BSNL 2399 Plan Might Help You Save Money In 2025 Avoid Next Recharge Price Hike With This Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X