Home
News

2026 முடியறதுக்குள்ள எல்லார்கிட்டயும் BSNL சிம் இருக்கும்.. 5ஜி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

23,000 புதிய 4ஜி டவர்கள்

அதாவது நெட்வொர்க் கவரேஜை மேம்படுத்தும் வகையில் மேலும் 23,000 புதிய 4ஜி டவர்கள் விரைவில் நிறுவப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார். இதுதவிர 5ஜி சேவைக்கான அடித்தளத்தையும் பிஎஸ்என்எல் இப்போது பலப்படுத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

2026 முடியறதுக்குள்ள எல்லார்கிட்டயும் BSNL சிம் இருக்கும்..

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் சுமார் 97,000 4ஜி டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. அதுவும் ஆரம்பத்தில் இருந்த நெட்வொர்க் பிரச்சனைகள் அனைத்தும் வெற்றிகரமாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் சேகர் பெம்மசானி கூறினார். குறிப்பாக நாடு முழுவதும் வலுவான 4ஜி கவரேஜ் உறுதி செய்யப்பட்ட உடன் இந்த 4ஜி டவர்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டியிட, பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவைக்கு வருவாய் பகிர்வு (Revenue-sharing model) முறையைக் கையாளவுள்ளது. இதற்கு வேண்டி இரண்டு முக்கிய உத்திகளை அமைச்சர் முன்வைத்துள்ளார். ஒன்று தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி உபகரணங்களை நிறுவுதல். இதில் வருவாய் பகிரப்படும். இரண்டாவது தற்போதுள்ள 4ஜி உபகரணங்களை நேரடியாக 5ஜி சேவைக்கு ஏற்ப மாற்றுதல். தற்போது இந்த முறைகளைச் சோதிக்கப் பல பைலட் திட்டங்கள் (Pilot programs) நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிஎஸ்என்எல் சேவையின் தரம் உயர்ந்து வருவதால், மக்கள் இதன் பக்கம் திரும்பியுள்ளனர். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மட்டும் புதிதாக 29.6 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 9.25 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

2026 முடியறதுக்குள்ள எல்லார்கிட்டயும் BSNL சிம் இருக்கும்..

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்க.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த 2026-ம் ஆண்டு பட்ஜெட் விலையில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 23000 new 4G towers to be installed soon: says MoS Pemmasani
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X