BSNL 200 நாள் திட்டம் அள்ளுது.. தனி ஸ்டைலில் புது பிளான்.. Jio, Airtel, Vi யாருகிட்டயும் இல்லை.. BSNL மட்டுமே
இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian Telecom Sector) பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் (BSNL network) ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொடர்ந்து மிகவும் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL prepaid recharge plans) அறிமுகம் செய்து வருகிறது. இதனால், பிஎஸ்என்எல் பல லட்சம் புதிய பயனர்களை பெற்று இப்போது இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது. இதற்கு நடுவே, பிஎஸ்என்எல் இப்போது 200 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை (BSNL 200 days validity plan) வெளியிட்டுள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை திடீரென அதிகரித்த காரணத்தினால், டெலிகாம் சந்தையில் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் (private telecom companies) ஏறக்குறைய 1 கோடி பயனர்களை இழந்துள்ளதாக சமீபத்தில் கணக்கெடுப்பு தகவல் தெரிவிக்கிறது. இந்த பயனர்களில் பலர் BSNL பக்கம் மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் 200 நாள் திட்டம் (BSNL 200 Days Validity Plan):
பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது என்ற ஒற்றை காரணத்தை தாண்டி, நிறுவனம் இப்போது அதன் நெட்வொர்க் கவரேஜை இந்தியா முழுக்க மேம்படுத்தி வருகிறது. இதை நேரடியாக பார்க்கும் மக்கள், தனியார் டெலிகாம் நிறுவனங்களை புறக்கணித்து, பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை நம்பி மாறி வருகின்றனர். பிஎஸ்என்எல் இப்போது இந்தியாவில் சுமார் 50,000-திற்கும் மேற்பட்ட BSNL 4G டவர்களை நிறுவியுள்ளது.
இப்போது வரை, சுமார் 41,000 புதிய 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் ஆக்டிவேட் செய்து, அந்தந்த பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. இனி அடுத்து வரும் மாதங்களில் நிறுவனம் இன்னும் கூடுதலாக 50,000 புதிய பிஎஸ்என்எல் 4ஜி டவர்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், மலிவு விலையில் 4ஜி திட்டங்கள் கிடைப்பதனால் மக்கள் கூட்டம் பிஎஸ்என்எல் அலுவலகங்களை நிரப்ப துவங்கியுள்ளனர்.
பிஎஸ்என்எல் ரூ. 999 திட்டம் (BSNL Rs 999 Plan):
தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறிய தகவலின் படி, ஜூன் 2025-க்குள் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை பரவலாக கிடைக்குமென்று கூறியிருக்கிறார். இதற்கு நடுவே, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக புதிய மலிவு விலை திட்டம் ஒன்றை 200 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு புது மாதிரியான திட்டமாக இருக்கிறது.
இதுவரை இப்படி ஒரு திட்டம் ஜியோவிடம் இல்லை, ஏர்டெல்லிடம் இல்லை, அவ்வளவு ஏன் வோடபோன் ஐடியா நெட்வொர்க்கிடம் கூட இல்லை என்று கூறும் அளவிற்கு புது ஸ்டைலில் 200 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தை BSNL நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 999 திட்டம் (BSNL Rs 999 Plan) என்று அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தை (BSNL Rs 997 Plan):
இந்த திட்டம் 200 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை அணைத்து நெட்வொர்க் அழைப்பிற்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை என்று எதுவுமே கிடையாது. வாய்ஸ் ஒன்லி திட்டமாக இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டேட்டா நன்மை தேவையில்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் அதிக வேலிடிட்டி உடன் முழு அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது.
இப்படி ஒரு திட்டத்தை இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக டேட்டா மற்றும் SMS நன்மையுடன் இதே வேலிடிட்டியை தேடும் வடிக்கையாளர்களுக்காக BSNL நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தை (BSNL Rs 997 Plan) வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ், தினசரி 2GB டேட்டா மற்றும் தினசரி 100 SMS நன்மை ஆகியவற்றை 160 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








