பிஎஸ்என்எல் ஆட்டம்.. மாதாந்திரம் ரூ.150-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 90 ஜிபி!
தினசரி டேட்டா திட்டங்களைவிட லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்களின் விலை மலிவாக இருக்கும். அதே நேரத்தில் அதிக வேலிடிட்டி கொடுக்கப்படும். இதுபோன்ற திட்டங்களின் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களை தூக்கி சாப்பிடிருக்கிறது. இப்போது, பார்க்கப்போகும் ப்ரீபெய்ட் திட்டமும் அப்படித்தான். லம்ப்-சம் டேட்டாவுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது.
மாதத்துக்கு ரூ.150 செலவில் கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. அதாவது, இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ 897 ஆக இருக்கிறது. இதற்கு 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு 6 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் மற்ற நிறுவனங்களில் கிடையாது. ஆகவே, 6 மாதம் வேலிடிட்டி வருவதால், மாத செலவை கணக்கிடுங்கள்.

உங்களுக்கு வெறும் ரூ 149.5 மட்டுமே தேவைப்படும். ஆகவே, இந்த செலவில் 6 மாதங்களுக்கு வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் சலுகை மற்றும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையையும் பெற்று கொள்ளலாம். இப்போது முழு விவரங்களை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் 180 நாட்கள் வேலிடிட்டி திட்ட சலுகைகள் (BSNL 180 Days Validity Plan Offers): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முன்பே சொன்னதை போல 90 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படும். அதாவது, இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் என்ற ஒன்று கிடையாது. பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு எப்போது தேவையோ அப்போது பயன்படுத்தலாம்.
ஒரு நாளுக்கு 5 ஜிபியும் பயன்படுத்தலாம் அல்லது 50 ஜிபியும் பயன்படுத்தலாம். ஆனால், வேலிடிட்டிக்கு முன்பாக முடித்துவிட்டால், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, பிஎஸ்என்எல் டேட்டா ஒன்லி திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இந்த விலைக்கு இது போதுமான டேட்டாவாகவே இருக்கிறது.
டேட்டா சலுகைக்கு பிறகு 180 நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் (Unlimited Local Voice), எஸ்டிடி வாய்ஸ் (STD Voice) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் (National Roaming Voice) கால்கள் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளே பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால், இதில் எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
சொல்லப்போனால், இதுபோன்ற லம்ப்-சம் டேட்டா திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகளும் லம்ப்-சம் முறையில் மட்டுமே கொடுக்கப்படும். அதாவது, நாளொன்றுக்கு இவ்வளவு எஸ்எம்எஸ்கள் என்ற கணக்கு இல்லாமல், மொத்தமாக ஒரு கணக்கில் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுவிடும். ஆனால், இதில் நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் வழக்கமான முறையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு ரீசார்ஜ் மலிவான விலைக்கு வேண்டுமானால், இந்த திட்டத்தை ஆப்ஷனில் எடுங்கள். அதிலும் டேட்டா சலுகைகள் வேண்டாம். வாய்ஸ் கால்கள் மட்டும் போதும், எஸ்எம்எஸ்கள் வர வேண்டும் என்று கேட்டால், இதைவிட பெஸ்ட் ஆப்ஷனாக வேறு திட்டம் இருக்காது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








