Home
News

BSNL-க்கு கும்பிடு.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. வெறும் ரூ.897 போதும்.. 90 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இப்படி 180 நாட்கள் மற்றும் 160 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை கஸ்டமர்கள் போட்டிப்போட்டு ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தொடங்கி குறையில்லாத டேட்டா வரையில் சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருப்பதால், புதிய பிஎஸ்என்எல் கஸ்டமர்களை இந்த திட்டங்கள் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த 6 மாத திட்டங்களின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாதபடி 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரூ.897 விலைக்கும், 160 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரூ.997 விலைக்கும் பிஎஸ்என்எல் கொடுக்கிறது. ஒரு திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா சலுகையும் மற்றொரு திட்டத்தில் தினசரி டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

BSNL-க்கு கும்பிடு.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

பிஎஸ்என்எல் 180 நாட்கள் திட்டம் (BSNL 180 Days Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா சலுகையுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஆகவே, 180 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை பெற்று கொள்ளலாம். இதில் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கிடைக்கிறது.

ஆனால், டேட்டா சலுகை அப்படி கிடையாது. 180 நாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 90 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். அதாவது, தினமும் இவ்வளவு ஜிபி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற லிமிட் இல்லாமல், தேவைப்படும்போது எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தும் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இருப்பினும், போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

தினசரி டேட்டா முடிந்த பிறகு குறைவான வேகத்தில் டேட்டா கிடைப்பது போலவே, இந்த 90 ஜிபி டேட்டாவானது, 180 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே பயன்படுத்தி முடித்துவிட்டால், உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படும். இது வேலிடிட்டி முடியும் வரையில் உங்களுக்கு கிடைக்கும். ஆனால், எஸ்எம்எஸ்களில் லம்ப்-சம் இல்லை.

வாய்ஸ் கால்களை போலவே தினசரிக்கு கிடைக்கின்றன. ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை ஒரு நாளுக்கு கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இப்போது, இதைவிட கம்மியான வேலிடிட்டியில் தினசரி டேட்டாவை கொடுக்கும் மற்றொரு 6 மாத திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம். இது கிட்டத்தட்ட 6 மாதம்தான். ஆகவே, 160 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் 160 நாட்கள் திட்டம் (BSNL 160 Days Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டம் முந்தைய திட்டத்தைவிட கூடுதல் விலைக்கும் கம்மியான வேலிடிட்டிக்கும் கிடைக்கிறது. இதற்கு காரணம் டேட்டா சலுகைதான். ஏனென்றால், இதில் லம்ப்-சம் டேட்டா கிடையாது, தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, 320 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாக கிடைக்கிறது. இதனாலேயே வேலிடிட்டி 160 நாட்களுக்கு மட்டும் கிடைக்கிறது. மற்ற சலுகைகளுக்கு எந்தவித குறையும் இல்லை. ஆகவே, 2 ஜிபிக்கு பிறகு கிடைக்கும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும், தினசரிக்கு கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் இந்த திட்டத்துக்கு கிடைத்து இருக்கிறது. வாய்ஸ் கால்களில் கவலை இல்லை.

அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள அனுமதி கிடைக்கிறது. ரூ.1000 விலைக்குள் பாதி வருடத்துக்கு ப்ரீபெய்ட் திட்டம் தேடிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் நல்ல சலுகைகளை கொடுக்கின்றன. அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும்போது ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 180 Days And 160 Days Validity Plan With Unlimited Voice Calls For Rs 897 And Rs 997 Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X