Home
News

BSNL நெத்தியடி.. 160 நாள் திட்டம்.. 320GB டேட்டா, வாய்ஸ், SMS எல்லாமே தரோம்.. Jio, Airtel, Vi தலையில் இடி..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது 160 நாட்களுக்கு செல்லுபடியாகும் மிகமிக மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்காத விலையில், இத்தகைய அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) தற்போது அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மிகவும் தனித்துவமான திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகளை BSNL வழங்குகிறது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கையான நெட்வொர்க்காக மாறி வருகிறது. மலிவு விலையில் 4ஜி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிக நன்மையுடன் வழங்கி அசத்தி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது இந்தியாவின் பல இடங்களில் அதன் 4ஜி நெட்வொர்க்கை விவிரிவுபடுத்தியுள்ளது. 50,000 புதிய 4ஜி டவர்களை நிறுவி, அதில் 41,000-திற்கும் மேற்பட்ட டவர்களை ஆக்டிவேட் செய்து, பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இப்போது விரிவுபடுத்தியுள்ளது.

BSNL நெத்தியடி.. 160 நாள் திட்டம்.. 320GB டேட்டா, வாய்ஸ், SMS எல்லாமே

BSNL நெத்தியடி.. Jio, Airtel, Vi தலையில் இடி.. பெஸ்ட் 160 நாள் திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது குறைந்த செலவில் அதிக வேலிடிட்டியை வழங்கும் மற்றொரு சிறப்பான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இப்போது தினசரி டேட்டா (Daily Data) நன்மை, இலவச எஸ்எம்எஸ் (free SMS) நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Voice Calls) நன்மையை வழங்குகிறது.

இந்த புதிய 160 நாள் வேலிடிட்டி திட்டத்தின் கீழ் கிடைக்கும் முழு நன்மைகள் என்னென்ன என்பதை தெளிவாக பார்க்கலாம். இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது (BSNL prepaid plan) பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டமாகும் (BSNL Rs 997 Plan). இந்த புதிய BSNL Rs 997 Plan அதன் பயனர்களுக்கு, தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டமாகும் (BSNL Rs 997 Plan):

160 நாட்களுக்கும் தினசரி 2GB டேட்டா என்று கணக்கிட்டால், இந்த திட்டம் மொத்தமாக உங்களுக்கு 320GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice Calls) நன்மையுடன், இலவச நேஷனல் ரோமிங் (National Roaming) நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் நீண்ட நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இது 160 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த திட்டம் 5 மாதம் மற்றும் 10 நாள் வேலிடிட்டியை அசால்ட்டாக வெறும் ரூ. 997 விலையில் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், 160 நாட்களுக்கு நீங்கள் உங்கள் கையில் இருந்து வெறும் 6 ரூபாய் மட்டுமே செலவிடும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) நீண்ட காலத்திற்கு குறைந்த செலவில் ஆக்டிவ் நிலையில் வைப்பது மட்டுமின்றி, 160 நாட்களுக்கு அட்டகாசமான நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL 160 Days Validity Prepaid Plan Offers 320GB Total Data Unlimited Voice Calls and 100 SMS Daily Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X