Just In
- 10 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 10 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 11 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 11 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! 1500ஜிபி டேட்டா திட்டம்.!
ஜியோ நிறுவனம் ஒரு சில சலுகைகள் அறிவித்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களும் நல்ல வரவேற்பை பெருகிறது.

அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் மட்டுமே அதன்1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது, தற்சமயம் இந்த திட்டத்தை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு
பிஎஸ்என்எல் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஜூனியர் டெலிகாம் அதிகாரி ஒருவர் ட்வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார். அந்தட்விட்டில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.1,999 மதிப்புள்ள அதன் 1500 ஜிபி திட்டத்தை சேலம், ஏற்காடு,ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ராசிபுரம், நாமக்கல், வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில்
அறிமுகம் செய்துள்ளது.

இந்த 1500ஜிபி ஃபைபர்-டு-ஹோம் (எஃப்டிடிஎச்) திட்டமானது எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுடன் 1500 ஜிபி அளவிலான டேட்டாவை 200எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பிட்ட FUP வரம்பை அடைந்த பிறகு, இணைய வேகம் ஆனது 22Mbps ஆக குறைக்கப்படும், பின்பு இந்த 1500ஜிபி எப்டிடிஎச் திட்டம் ஆனது ஒடிசாவின் பாவனிபட்னா நகரத்திலும, புதுச்சேரி பகுதிகளிலும் கூட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே சேலம், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ராசிபுரம், நாமக்கல், வேலூர், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் ரூ.499 (100 ஜிபி வரை 20 எம்.பி.பி.எஸ்) என்கிற பேஸிக் திட்டம் முதல் ரூ.1,999 (200 எம்.பி.பி.எஸ் வரை 1500 ஜிபி வரை) திட்டம் வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.749 திட்டத்துடன் இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அனைத்து பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டங்களும் இலவசமாக ரூ.999-மதிப்புள்ள அமேசான் ப்ரைம் சந்தாவைவழங்கி வருகிறது, ஆனால் இந்த நன்மை ரூ.1,999 திட்டதிலும் கிடைக்குமா என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

மேற்கண்ட பிராட்பேண்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு தளத்தில் நேரலையில் இருக்கின்றன, பின்பு இந்த தகவலை முதலில் கண்டறிந்து வெளியிட்டது டெலிகாம் டால்கா வலைதளம் ஆகும். அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், இந்த திட்டம் முதலில் தெலுங்கானா மற்றும் சென்னை வட்டங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் ஆகும்.

பின்பு பிஎஸ்என்எல் பவானிபட்னா ட்விட்டர் பக்கத்தில் ஒடிசாவின் பவானிபட்னா நகரத்தில் 1500ஜிபி பாரத் ஃபைபர் திட்டமும் பிற எஃப்டிடிஎச் திட்டங்களும் அணுக கிடைக்கின்றன. மேலும் 1500 ஜிபி திட்டம் புதுச்சேரியிலும் அணுக கிடைப்பதாக டெலிகாம் டால்க் வலைதளம் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470