அட்ராசக்கை ஆட்டம் ஆரம்பம்.. BSNL 150 நாள் திட்டம்.. யாரு தருவா இந்த கம்மி விலைக்கு? எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) என்று செல்லமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவின் தொலைத்தொடர்பு (Telecom) சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் இப்போது வெறும் 400 ரூபாய் விலைக்குள் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தால் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றன.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். இது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட தொலைத்தொடர்புத் துறையின் உரிமையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக மந்தமாக செயல்பட்டுக்கொண்டிருந்த நிறுவனம் கடந்த வருடம் முதல் தீயாய் வேலை செய்ய துவங்கியுள்ளது.

அட்ராசக்கை ஆட்டம் ஆரம்பம்.. BSNL 150 நாள் திட்டம்:
இதனால், பல கோடி புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக திகழ்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பிஎஸ்என்எல் 5ஜி சேவையையும் விரைவில் களமிறக்க திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.
நமக்கு கிடைத்த தகவல் சரி என்றால், வரும் ஜூன் 2025 முதல் இந்திய மக்கள் BSNL 5G சேவையை அனுபவிக்க முடியுமென்று கூறப்படுகிறது. இந்த நல்ல செய்திக்கு இடையில், பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, மலிவு விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ரூ. 400 விலைக்குள் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்கி அசத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் (BSNL Rs 397 Plan):
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் (BSNL Rs 397 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த திட்டம் நீண்ட நாள் வேலிடிட்டியை குறைந்த செலவில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி டேட்டா நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளை சில நிபந்தனைகளுடன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் 397 திட்டதின் பயனர்கள் முதல் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை அனுபவிக்க முடியும். இந்த திட்டத்தின் பயனர்கள் முதல் 30 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மையையும் அனுபவிக்க முடியும். இதன் மூலம் மொத்தமாக 60GB டேட்டா நன்மை கிடைக்கிறது.
BSNL BiTV இலவச சேவை:
இந்த திட்டம் முதல் 30 நாட்களுக்கு தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது. 30 நாட்களுக்கு பிறகு இந்த திட்டம் இன்கம்மிங் அழைப்பு சேவையுடன் உங்கள் சிம் கார்டு வேலிடிட்டியை 150 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. கூடுதல் டேட்டா அல்லது வாய்ஸ் கால் சேவைக்கு நீங்கள் பிஎஸ்என்எல் வவுச்சர்களை உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக BiTV சேவையை வழங்குகிறது. இந்த சேவையின் மூலம் இன்டர்நெட் தேவையின்றி, 400+ லைவ் டிவி சேனல்களை உங்களால் போனில் கண்டு மகிழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த BiTV சேவையும் உங்களுக்கு இந்த பிஎஸ்என்எல் 397 திட்டத்துடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நன்மைகளை இந்தியாவில் உள்ள எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








