BSNL அசத்திட்டீங்க போங்க.. 150 நாளுக்கு ஒருமுறை ரீசார்ஜ் பிளான்.. தினமும் 2GB.. வாய்ஸ்.. SMS.. எந்த திட்டம்?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது, இந்தியாவில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையிலான ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் புதிய திட்டம் 300 ரூபாய் விலை ரேஞ்சில் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 150 days validity plan) கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் அசல் விலை என்ன? இத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களானது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் சாமர்த்தியமாக வேலை செய்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவில் மக்களுக்கான ஒரு நம்பகமான டெலிகாம் ஆப்பரேட்டராக மாறியுள்ளது. இந்தியா முழுக்க இப்போது 4ஜி நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல், மறுபுறம் 5ஜி சேவைக்கான வேலையையும் நிறுவனம் இப்போது மேற்கொண்டு வருகிறது.

BSNL அசத்திட்டீங்க போங்க.. 150 நாளுக்கு ஒருமுறை ரீசார்ஜ் பிளான்:
முன்பை விட இப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க் கவரேஜ் சிறப்பாக இருப்பதாக பழைய பிஎஸ்என்எல் பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இணைய வேகமும் இப்போது சிறப்பாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்கும் வட்டங்களில் இணைய வேகம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தெரிவித்துள்ளனர். தொலைத்தொடர்பு சேவையில் இப்போது மலிவு விலையில் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக BSNL உருவமறியுள்ளது.
மலிவு விலையில் சிறந்த நன்மை என்று கூறுகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது யாருமே எதிர்பார்த்திடாத விலையில் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பற்றிய விபரங்கள் இதோ. பிஎஸ்என்எல் நிறுவனம் 150 நாள் செல்லுபடியுடன் வழங்கியுள்ள புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் (BSNL Rs 397 Plan).
பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் (BSNL Rs 397 Plan):
இந்தியாவில் உள்ள எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் இதுவரை இந்த விலையில் இப்படி ஒரு நன்மையை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அதன் பயனருக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் லோக்கல், எஸ்டிடி மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் போன்ற அணைத்து அழைப்பு சேவைகளையும் முதல் 30 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் 150 நாட்களுக்கு செல்லுபடியானாலும் இதனுடன் கிடைக்கும் நன்மைகளுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். இந்த திட்டத்துடன் தினமும் 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. இதுவும் முதல் 30 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது, இதுவும் முதல் 30 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மை தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும்.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் முதல் 30 நாட்களுக்கு பயன்படுத்த கிடைத்தாலும், இந்த திட்டம் 150 நாட்களுக்கு உங்கள் சிம் கார்டை இயக்க நிலையில் வைக்கிறது. 150 நாட்களுக்கு பிறகு நீங்கள் அடுத்த ரீசார்ஜ்ஜை மேற்கொள்ளலாம். இந்த இடைப்பட்ட காலத்தில், கூடுதல் வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைக்கு நீங்கள் பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டா வவுச்சர் அல்லது வாய்ஸ் பேக் வவுச்சர்களை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications