யாரு சாமி நீ? வெறும் 400-க்குள் 150 நாள் வேலிடிட்டி தர.. BSNL ஆட்டம் ஆரம்பம்.. இனி ரீசார்ஜ் டென்ஷனே இல்லை..
பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது இந்தியாவின் மிகவும் மலிவான டெலிகாம் ஆப்பரேட்டராக (telecom operator) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), Vodafone ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற தலைசிறந்த தனியார் டெலிகாம் (telecom) நிறுவனங்கள் கூட வழங்க முடியாத விலையில், BSNL முதல் முறையாக 150 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ. 400 கூட இல்லை என்பதனால், இந்திய மக்களிடம் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்றழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 400 விலைக்குள் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. என்ன தான் BSNL நிறுவனம் அதன் பட்டியலில் பலவிதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வந்தாலும், தற்போது பிஎஸ்என்எல் புதிதாக அறிமுகம் செய்துள்ள புதிய பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த திட்டம் Jio, Airtel, Vi போன்ற பயனர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இப்போது தனியார் டெலிகாம் பயனர்களும் கூட, பிஎஸ்என்எல் பக்கம் மாற வாய்ப்பு கிடைக்கிறதா என்று எதிர்பார்க்கின்றனர். சரி, BSNL அறிமுகம் செய்த இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று விரிவாக பார்க்கலாம். BSNL அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் ரூ. 397 விலையில் வருகிறது.
BSNL வழங்கும் இந்த திட்டம் 397 ரூபாய் விலையில் உங்களுக்கு 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த திட்டம் 5 மாத செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. 397 ரூபாய் விலையில் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் இவ்வளவு அதிகமான வேலிடிட்டியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் சிம் கார்டு இருக்கும் மக்கள், உடனே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம். அதற்கு முன், இந்த திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த ரீசார்ஜ் திட்டம் 150 நாட்களுக்கு இலவச இன்கமிங் அழைப்புகளைப் பெற அனுமதிக்கிறது. இது உங்கள் சிம் கார்டை 150 நாளுக்கு ஆக்ட்டிவாக வைக்கிறது. முதல் 30 நாட்களுக்கு, இந்த திட்டம் நாட்டில் உள்ள எந்த எண்ணுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் வாய்ஸ் கால்ஸ் நன்மை லோக்கல், STD மற்றும் நாடு முழுவதும் இலவச ரோமிங் நன்மையை வழங்குகிறது. இருப்பினும், ஆரம்ப 30 நாட்களுக்குப் பிறகு, பயனர்கள் அழைப்பு நன்மைக்காக டாப் ஆப் செய்துகொள்ள வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. டாக் டைம் ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொண்டால் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கும். ஆனால், எந்த கட்டணமுமின்றி 150 நாட்களும் இலவசமாகவே இன்கமிங் அழைப்புகளை அனுபவித்துக்கொள்ளலாம்.
அதேபோல், இந்த திட்டத்தில் முதல் 30 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. 30 நாளுக்கு பிறகு, 40kbps வேகத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. கூடுதலாக, இத்துடன் முதல் 30 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கிறது. இந்த திட்டம் 150 நாட்களுக்கு இன்கம்மிங் நன்மையை வழங்குவதோடு, உங்கள் சிம் கார்டை கூடுதல் ரீசார்ஜ் எதுவும் இல்லாமல் ஆக்டிவ் நிலையில் வைக்கிறது.


Click it and Unblock the Notifications








