இறங்கி அடித்த BSNL.. 150 நாட்கள்.. வெறும் ரூ.397 போதும்.. ஆனால், ஒரு கன்டிஷன்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கனவிலும் நினைக்காத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கொடுக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் சர்வீஸ் வேலிடிட்டி மற்றும் சலுகைகளில் கன்டிஷன் இருக்கிறது. இதை தெரிந்து கொண்ட பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
பிஎஸ்என்எல் 150 நாட்கள் திட்டம் சிம் ஆக்டிவ் (BSNL 150 Days Plan SIM Active): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் 5 மாதங்களுக்கு கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் 150 நாட்களுக்கு கிடைக்குமா? என்று பார்த்தால் அதுதான் இல்லை.

150 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டாலும், முதல் 30 நாட்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்த முடியும். இந்த சலுகைகள் லாபமாகவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து 30 நாட்களுக்கு உங்களுக்கு தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். 60 ஜிபி டேட்டாவை பெற முடிகிறது.
இந்த 2 ஜிபிக்கு பிறகும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் டேட்டாவை பயன்படுத்த முடியும். ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே உங்களுக்கு போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த போஸ்ட் டேட்டாவும் அந்த 30 நாட்கள் வேலிடிட்டியில் மட்டுமே கிடைக்கிறது. அடுத்து வரும் 120 நாட்களுக்கு எந்த டேட்டா சலுகையையும் இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே, அதற்கு கூடுதல் கட்டணங்கள் அல்லது டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும். இப்போது, வாய்ஸ் கால்களுக்கு வருவோம். இந்த திட்டத்தில் 30 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) கஸ்டமர்களால் செய்து கொள்ள முடிகிறது. ஆகவே, இதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
இந்த 30 நாட்களில் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறதா? என்றால் ஆமாம், அதுவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை நீங்கள் அனுப்பி கொள்ள முடியும். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமே வேண்டும், கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா தேர்வாக இருக்கும்.
அதோடு 30 நாட்களுக்கு சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். பிஎஸ்என்எல் சிம் கார்டை செகண்டரியாக வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஆகவே, இந்த திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். 150 நாட்களுக்கு எப்படி வெறும் ரூ.397 விலை இருக்கிறது என்று தோன்றினால், இதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதேபோல சில நாட்களுக்கு சலுகைகளும், பல நாட்களுக்கு வேலிடிட்டியும் கிடைக்கும்படி மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ.197 செலவில் 70 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனால், சலுகைகள் முதல் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதற்கு பிறகு சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) மட்டுமே இருக்கும். விவரங்களை இப்போது பார்ப்போம்.
இந்த திட்டத்தில் 15 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த சலுகைகள் முடிந்த பிறகு சிம் ஆக்டிவ் மட்டும் 70 நாட்கள் வரையில் தொடர்ந்து இருக்கும். ஆகவே, சலுகைகள் முடிந்த பிறகு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களுக்கு கட்டணங்கள் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








