பழுப்பு நிற கேலக்ஸி நோட் 2

Posted By: Staff
பழுப்பு நிற கேலக்ஸி நோட் 2

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 2 ஒரு புகழ்பெற்ற சாதனமாகும். ஆனால் இது 2 வண்ணங்களில் மட்டுமே வெளியானது. அந்த வண்ணங்கள் கருமை மற்றும் வெண்மை. எல்லோர் மனதையும் கொள்ளையடித்த இந்த பேப்லெட் இப்பொழுது புது வடிவமெடுக்கவும் உள்ளது.

 

அந்த புது வடிவம் என்னவெனில் இந்த சாதனம் இனி பழுப்பு நிறத்திலும் வெளியாகவுள்ளது. இந்த கேலக்ஸி நோட் 2, ஒரு டோகோமோ லோகோவிட்ட ஒரு பெட்டியில் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதைப்பார்த்தால் இந்த வண்ணம் ஜப்பானில் மட்டும் இப்பொழுது கிடைக்கும்போல தெரிகிறது.

பழுப்பு நிற கேலக்ஸி நோட் 2

மற்ற நாடுகளுக்கு எப்பொழுது கிடைக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம்தான் இதற்கான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் 4.1.2 என்ற ஜெல்லிபீன் அப்டேட் கிடைக்கப்பெற்றது நினைவிருக்கலாம்.

 

இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் CES 2013ல் வெளியிடப்படவுள்ளது. இதன் சில தொழில்நுற்பக்கூறுகளாவன,

  • 5.5 அங்குல சூப்பர் AMOLED திரை,

  • 1.6 குவாட்-கோர் ப்ராசெசர்,

  • 2 ஜிபி ரேம்,

  • ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்,

  • 8 எம்பி கேமரா,

  • Wi-Fi மற்றும் ப்ளுடூத்,

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot