ஏலியன்களால் 52 முறை கடத்தப்பட்ட பெண்.. இத்தனை புகார்கள் வந்திருக்கா? உண்மையாதான் சொல்றீங்காளா?

|

விஞ்ஞான சான்றுகள் இல்லாத போதிலும், சதி கோட்பாட்டாளர்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் பூமிக்கு அடிக்கடி வருகை தருவதாகவும், உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண யுஎஃப்ஒ என்னும் பறக்கும் மர்மப் பொருட்களைப் பார்வையிட்டதாகவும் பலமுறை தெரிவித்துள்ளனர். பூமியில் ஏலியன்கள் இருப்பதற்கான அறிகுறியாகப் பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

பிரிட்டிஷைச் சேர்ந்த பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்

பிரிட்டிஷைச் சேர்ந்த பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்

அப்படிப் பல நம்ப முடியாத விஷயங்களைச் சதி கோட்பாட்டாளர்கள் கூறிவந்த நிலையில், இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில் பிரிட்டிஷைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய நம்பமுடியாத கோட்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, அவர் 50க்கும் மேற்பட்ட தடவைகள் வேற்று கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

யுஎஃப்ஒவின் தொழில்நுட்ப அம்சங்களைக் கண்ட பெண்

யுஎஃப்ஒவின் தொழில்நுட்ப அம்சங்களைக் கண்ட பெண்

கடத்தப்பட்டது மட்டுமின்றி அவர் அடுத்துத் தெரிவித்த சில விஷயங்கள் இன்னும் பயங்கரமானதாக இருந்துள்ளது.

ஏலியன்களுடன் ஏற்பட்ட அமானுஷ்ய சந்திப்புகளின் போது, அவர் ​​யுஎஃப்ஒவின் தொழில்நுட்ப அம்சங்களைக் கண்டதாகவும். அவரை கடத்திய ஏலியன்கள் சில்வர் நிறத்தில் இருந்ததாகவும் அவர் பல நம்ப முடியாத தகவலை இப்போது வெளி உலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

குழந்தையாக இருந்தபோதே வேற்று கிரகவாசிகளால் கடத்தப்பட்டேன்

குழந்தையாக இருந்தபோதே வேற்று கிரகவாசிகளால் கடத்தப்பட்டேன்

DailyStar அறிக்கைப் படி, ஆச்சரியப்படுத்தும் வெளிப்பாடு பவுலா ஸ்மித் என்னும் 50 வயதான பெண் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மித், குழந்தையாக இருந்தபோது வேற்று கிரகவாசிகளுடன் தனது முதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அது அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கடத்தப்பட்ட ஏலியன்களால் அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கான அடையாளங்களும் அவரின் உடலில் இன்னும் காணப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

மர்மமான உயிரினங்களைக் காட்ட கூடிய விசித்திரமான புகைப்படங்கள்

மர்மமான உயிரினங்களைக் காட்ட கூடிய விசித்திரமான புகைப்படங்கள்

ஏலியன்கள் வெள்ளி நிறத்தில் இருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார். அவர் சந்தித்த மற்றும் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட மர்மமான உயிரினங்களைக் காட்ட கூடிய விசித்திரமான புகைப்படங்களை அவர் வரைந்துள்ளார் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த படங்கள் வேற்று கிரகவாசிகளை வெள்ளி நிற உயிரினங்களாக நீண்ட கால்கள் மற்றும் கைகளுடன் இருப்பது போன்றும், விண்கலத்திற்குள் இருப்பது போன்று ஸ்மித சித்தரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: யாருக்கெல்லாம் இ-பாஸ் கிடைக்கும்., விண்ணப்பிப்பது எப்படி?அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: யாருக்கெல்லாம் இ-பாஸ் கிடைக்கும்., விண்ணப்பிப்பது எப்படி?

50 ஆண்டு வாழ்நாளில் 52 அமானுஷ்ய ஏலியன் சம்பவங்ள்

50 ஆண்டு வாழ்நாளில் 52 அமானுஷ்ய ஏலியன் சம்பவங்ள்

''தனது 50 ஆண்டு வாழ்நாளில் இதுவரை நான் சுமார் 52 அமானுஷ்ய ஏலியன் சம்பவங்களை அனுபவித்திருக்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார். இது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நடந்தது என்றும், இது நடக்கப்போவதை என்னால் உணர முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல், அவர் ஒரு யுஎஃப்ஒவில் பயணித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஸ்மித் சொன்ன விஷயங்களை யாரும் நம்பவில்லை

ஸ்மித் சொன்ன விஷயங்களை யாரும் நம்பவில்லை

ஆனால், அந்த நேரத்தில் "என்னால் எதையும் உணர முடியவில்லை," என்று அவர் பிரிட்டிஷ் செய்தி ஊடகத்திடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் தனக்குப் பலமுறை நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.ஸ்மித் சொன்ன விஷயங்களை யாரும் நம்பவில்லை என்றும், அவர் ஏளனத்திற்குப் பலியாகிவிட்டார் என்றும், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் அவரது கதைகளை நம்ப மறுத்துவிட்டனர் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஏலியன் NUFORC அறிக்கையின் தரவு

நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஏலியன் NUFORC அறிக்கையின் தரவு

இவர் சொல்லும் விஷயங்கள் உண்மை தான் என்று நிரூபிக்கும் வகையில் திடமான எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை என்பதனால் இதை முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால், பூமியில் வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

காரணம், சமீபத்தில் வெளியான NUFORC அறிக்கையின் தரவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

கடந்த மாதம் மட்டும் 480 புதிய புகார்களா?

கடந்த மாதம் மட்டும் 480 புதிய புகார்களா?

இந்த 50 வயதான பெண் சொல்லும் கூற்று போல, பூமியில் பல இடங்களில் வாழும் மக்கள் பலமுறை யுஎஃப்ஒ மற்றும் விசித்திரமான பொருள்களின் பார்வை பற்றித் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. தேசிய யுஎஃப்ஒ அறிவிப்பு மையம் (NUFORC) வெளியிட்டுள்ள தரவு படி, கொரோனா தொற்று போது நடந்த ஊரடங்கு காலத்தில் ஏராளமான UFO தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும்போது, கடந்த மாதம் மட்டும் 480 புதிய புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
British Woman Smith Claims She Has Been Kidnaped By Silver colour Aliens Over 52 times : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X