பிரிட்டிஷ் ஏர்வேஸ் : 3,80,000 பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக் செய்யப்பட்டது.!

ஹேக்கர்கள் இன் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது, ஹேக்கிங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலும் அதற்குச் சமமாய் இருக்கிறது.

By Sharath
|

ஹேக்கர்கள் இன் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது, ஹேக்கிங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலும் அதற்குச் சமமாய் இருக்கிறது. சென்ற மாதம் முதன் இந்த மாதம் வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவை பயன்படுத்திய 3,80,000 பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்:3,80,000 பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அபேஸ்.!

இதுவரை 20 வருடங்களாக யாரும் ஹேக் செய்ய முடியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவையை ஹேக் செய்து பயனர்களின் விபரங்கள் மோசடி செய்யப்பதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காதென்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியான அலெக்ஸ் க்ரூஸ் தெரிவித்தார்.

ஹேக்கர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சர்வரை முற்றிலும் ஹேக் செய்திடவில்லை, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் என்க்ரிப்ஷனை முறியடிக்க மற்றும் தகவல்களை திருட ஹேக்கர்கள் மிகவும் கடினமான ஹேக்கிங் வழிமுறையைப் பின்பற்றி இருக்கின்றனர் என்று க்ரூஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்:3,80,000 பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அபேஸ்.!

சர்வர் இல் இருந்து ஹேக்கர்கள் 3,80,000 பயனர்களின் பெயர்கள், விலாசம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், கிரெடிட் கார்டு எண்கள், காலாவதி தேதிகள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகள் ஆகியவற்றைப் ஹேக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிப்பட்ட விபரங்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பயனர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஹேக்கர்களை விரைந்து கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஹேக்கர்களை சிறைபிடிப்போம் என்று காவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
British Airways Apologises After Hack of 380,000 Customers, Offers Compensation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X