Jio ரீசார்ஜ் விலை உயர்வு? வெறும் ரூ.30 ரூபாய்ல ஆட்டம் க்ளோஸ்.. அம்பானியின் புதிய வியாபார தந்திரம்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த நொடியில் இருந்தே, ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் எப்போது உயர்த்தப்படும்? எந்த அளவிற்கு உயர்த்தப்படும்? என்கிற பீதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.
5ஜி அறிமுகத்தின் போது, நாடு முழுவதும் பரந்த அளவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் வரை ரீசார்ஜ் திட்டங்களின் மீது எந்த விலை உயர்வும் இருக்காது என்று கூறப்பட்டதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம். தற்போது ஜியோ நிறுவனம் அந்த கட்டத்தை எட்டிவிட்டது போல் தெரிகிறது.

அதாவது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டது. அடுத்தது என்ன.. ஜியோ ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு தானே? என்று பலரும் பீதியடைந்த நேரத்தில் முகேஷ் அம்பானி "வழக்கம் போல" தனக்கே உரிய பாணியில், ஒரு புதிய வியாபார தந்திரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்!
வெறும் ரூ.30 ரூபாய்ல ஆட்டம் க்ளோஸ்! திடீர் விலை உயர்வை அறிவிப்பது அவ்வளவு நல்ல நகர்வாக இருக்காது. அது சில எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். அதே சமயம் ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவரேஜ் ரெவின்யூ பெர் யூசரையும் (Average Revenue Per User), அதாவது "ஒரு பயனருக்கு சராசரி வருவாயையும்" விட்டுக்கொடுக்க முடியாது.
"என்ன செய்யலாம்?" என்று யோசித்த போது "வெறும் ரூ.30 ரூபாய்க்குள் இந்த ஆட்டத்தை க்ளோஸ் செய்தால் என்ன?" என்கிற யோசனை ஜியோவிற்கு பிறந்துள்ளது. உடனே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.30 க்குள் 2 புதிய ப்ரீபெய்ட் டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்தது; அதுதான் ரூ 19 மற்றும் ரூ.29.
1ஜிபி அல்லது 2ஜிபியை விட சற்றே கூடுதல் டேட்டாவை விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 திட்டங்களும் ஜியோ நிறுவனத்திற்கு 2 வெவ்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது. ஒன்று - 5ஜி அறிமுமான பின்னரும் கூட மிகவும் மலிவான விலையில் டேட்டாவை வழங்கும் ஒரே தனியார் டெலிகாம் நிறுவனம் ஜியோ தான் என்கிற பெயர் தக்கவைக்கப்படும்.
இரண்டாவது - ரூ.19 மற்றும் ரூ.29 திட்டங்கள் ஆனது ஜியோவை மிகவும் மலிவான ஆப்ரேட்டராக வைத்திருக்கும் அதேவேளையில் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) ஒரு சிறிய வித்தியாசத்தில் அதிகரிக்கவும் உதவும். இதன் மூலம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமலேயே ஜியோவால் தனது லாபத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
அறியாதோர்களுக்கு ஏஆர்பியு என்றால் ஒவ்வொரு பயனரிடமிருந்தும் அல்லது சந்தாதாரர்களிடமிருந்தும் பெறப்படும் பணத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தின் குறிகாட்டியாகும் (Indicator of the profitability). சந்தாதாரர்கள் அல்லது பயனர்களை நம்பியிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு அளவீடாகும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.19 ப்ரீபெய்ட் பேக்கின் நன்மைகள்: இது 1.5ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது. இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி ஆனது உங்களுடைய ஆக்டிவ் பிளானுடன் ஒற்றுப்போகும். வெறும் ரூ.4 வித்தியாசத்தில், ரூ.15 க்கு 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்துடன் ஒப்பிடும் போது இது நிச்சயம் ஒரு படி மேலே இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ 29 ப்ரீபெய்ட் பேக்கின் நன்மைகள்: இது 2.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டமும் உங்களுடைய ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். நினைவூட்டும் வண்ணம் ஜியோவிடம் ரூ.25 டேட்டா பூஸ்டர் திட்டமும் உள்ளது, அது 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. கூடுதலாக ரூ.4 செலுத்துவதன் மூலம் நீங்கள் 2.5ஜிபி டேட்டாவை பெறலாம்.


Click it and Unblock the Notifications








