வேஸ்ட் பேப்பர் இருக்கா.. வாங்க பென்சில் செய்யலாம்..!

Written By:

இனிமே வீணா கிடக்குற பேப்பர்களை குப்பைத்தொட்டியில போட வேண்டியது இல்ல, சட்டு புட்டுனு இதுக்குள்ள விட்டு பென்சில் ஒண்ணு செஞ்சு, பள்ளிக்கூடத்துக்கு போற பிள்ளைங்ககிட்ட கொடுத்துடலாம், பி அண்ட் பி - தேவையில்லாத காகிதங்களை பென்சிலாக மாற்றிக் கொடுக்கும் கில்லாடி கருவி !

வேஸ்ட் பேப்பர் இருக்கா.. வாங்க பென்சில் செய்யலாம்..!

பி அண்ட் பி-யின் மேல்பகுதியின் வழியாக ஒரு முழு காகிதத்தை உள்ளே விட்டு பட்டனை அழுத்தினால் போதும், கொஞ்ச நேரத்தில் மற்றொரு ஓட்டை வழியாக ஒரு பென்சில் வெளியே வந்து விழும்.

உயிரைக் காக்கும் தொழில்நுட்பங்கள்..!

உள்ளே விடப்படும் பேப்பர் ஒரு கிராஃப்பைட் ஸ்டிக்கில் (அதாவது நமக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா பென்சில் கூர்ப்பு, அதில்) இறுக சுருட்டப்படும், காகிதங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள வசதியாக இருக்கும் வகையில், இடையில் பசையும் சேர்க்கப்படும். உள்ளே பென்சில் ரெடி ஆனதும், அதை பி அண்ட் பி வெளியேற்றும்.

வேஸ்ட் பேப்பர் இருக்கா.. வாங்க பென்சில் செய்யலாம்..!

வெளியேறும் போதே பென்சில் சீவப்பட்டு தான் வரும். உடன் தேவைக்கேற்ப்ப சீவிக்கொள்ளும் வகையில் பி அண்ட் பி-யில் ஒரு ஷார்ப்னரும் உண்டு. பயன்படுத்தப்பட்ட காகிதங்களை மறுசுழற்ச்சி செய்து அதை மீண்டும் காகிதங்கலாக ஆக்குவதை விட இது இன்னும் சூப்பர், இன்னும் ஸ்மார்ட் என்பதை ஒற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை..!

Read more about:
English summary
P&P is a device which turns waste paper into Pencils.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot