காகிதத்திலிருந்து மின்சாரம் எடுத்த மாணவி! மலிவான விலையில் ஏழைகளுக்கு மின்சாரம் உருவாக்கலாம்!

|

நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு பல புதுமையான தொழில்நுட்பத்தைத் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். அப்படி தற்பொழுது பிரேசிலைச் சேர்ந்த 22 வயது மாணவி காகிதத்திலிருந்து மின்சாரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

அதிகரித்து வரும் மின்சார தேவை

அதிகரித்து வரும் மின்சார தேவை

மின்சார தேவை உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் மின்சாரத்தை உருவாக்க உலக நாடுகள் அனைத்தும் தங்களால் ஆனா முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுப்பது, காற்றிலிருந்து மின்சாரம் எடுப்பது மற்றும் தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுப்பது என்ற பல முறைகளில் தற்பொழுது இயற்கை முறையில் மின்சாரம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கெல்லி மொரேரா

கெல்லி மொரேரா

சான்டா மரியா பெடரல் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கெல்லி மொரேரா என்பவர் எதிர்காலத்திற்கான மின்சாரத்தைக் காகிதத்திலிருந்து உருவாக்க முடியும் என்று புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளார். கெல்லி மொரேரா தனது கண்டுபிடிப்பை ராய்டர் செய்தி நிறுவனத்திடம் காட்சிப்படுத்தி விளக்கியுள்ளார். இவரின் கண்டுபிடிப்பு முழுமையாக இயற்கையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

குறைந்த அளவு செலவு

குறைந்த அளவு செலவு

நீராவி வடிவில் காற்றில் இருக்கும் நீர் மூலக்கூறுகளை வைத்து அதன் மூலம் புதிய ஆற்றலை உருவாக்கியுள்ளார். பின்னர் அதனை கிராபைட் பூசப்பட்ட காகிதத்தில் செலுத்தி மின்சாரத்தைத் தயாரித்துள்ளார். இப்படி தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் மூலம் சுமார் 60 எல்.இ.டி. பல்புகலையும் செயல்பட வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு மிக மிக குறைந்த அளவு செலவு செய்யப்பட்டதாகவும் மாணவிதெரிவித்திருக்கிறார்.

BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?

ஏழைமக்களுக்குப் பயன்படும்

ஏழைமக்களுக்குப் பயன்படும்

மேலும் மொரேராவின் இந்த திட்டம் தொடக்க நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில், இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கும் மின்சாரம் தயாரித்து வழங்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை, சர்வதேச அளவில் ஏழைமக்களுக்குப் பயன்படும் விதத்தில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Brazilian student invents way to make electricity from paper : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X