Home
News

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பது சட்டவிரோதமானது.. ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த நீதிபதி.. புகார் செய்தால் இழப்பீடு..

ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் ஐபோன் சாதனங்களுடன் சார்ஜர் மற்றும் ஹெட்செட் இணைப்பு சாதனங்களை வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தம் செய்தது. இது ஆப்பிள் ரசிகர்களால் எதிர்க்கப்பட்டாலும், பின்பு வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், உண்மையில் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அதற்கான சான்று தான் இப்போது நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வு. ஆம், ஆப்பிள் ஐபோன்களுடன் சார்ஜர் இல்லது சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபோனுடன் சார்ஜர் மற்றும் ஹெட்செட்டை நீக்கியது ஏன்?

ஐபோனுடன் சார்ஜர் மற்றும் ஹெட்செட்டை நீக்கியது ஏன்?

ஆப்பிள் நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டில் அதன் ஆப்பிள் ஐபோன் 12 இல் தொடங்கும் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜிங் பிரிக் மற்றும் ஹெட்செட் சாதனங்கள் சேர்ப்பதை ஆப்பிள் முற்றிலுமாக நிறுத்தியது. இது ஆப்பிள் ரசிகர்களால் எதிர்க்கப்பட்டாலும், நிறுவனம் சொன்ன காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் வாய் அடைத்துப்போனார்கள். பூமியில் சேரும் மின்-கழிவைக் குறைக்கும் நோக்கத்தில் நிறுவனம் தனது பங்கைச் செய்வதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை என்றும் கூறி, ஆப்பிள் ரசிகர்களின் வாய்க்கு நிறுவனம் பூட்டு போட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதியின் தீர்ப்பு

பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதியின் தீர்ப்பு

எனினும், இந்த வாதத்தைப் பிரேசில் நீதிபதி முற்றிலுமாக நிராகரித்தார். நீதிபதியின் தீர்ப்பு உலகளவில் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நீதிமன்றத்தின் நீதிபதி கூறுகையில், ஐபோன் பெட்டியில் சார்ஜரை பேக் செய்யாத ஆப்பிள் நிறுவனத்தின் நடவடிக்கை முற்றிலுமாக 'துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமானது' என்று கண்டித்து பிரேசில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதேபோல், புகார் செய்த வாடிக்கையாளருக்கு $1,080 இழப்பீடு வழங்குமாறு குபெர்டினோ நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடு உண்மையில் அது சொல்லிய காரணம் போல் இல்லையே

நிறுவனத்தின் செயல்பாடு உண்மையில் அது சொல்லிய காரணம் போல் இல்லையே

மத்திய பிரேசிலில் உள்ள கோயாஸ் (Goias) மாநிலத்தைச் சேர்ந்த பிராந்திய நீதிபதி வாண்டர்லி கெயர்ஸ் பின்ஹீரோ (Vanderlei Caires Pinheiro), ஆப்பிள் ஐபோனின் இயல்பான செயல்பாட்டிற்கு அடாப்டர் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டினார். மேலும், உற்பத்தியாளர் உள்ளூர் நுகர்வோர் சட்டத்தை அதன் பேக்கேஜிங்கிலிருந்து தவிர்த்துவிட்டதைக் கண்டறிந்தார். இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாடு உண்மையில் மின்-கழிவைக் குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட நோக்கம் போல் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை மிகவும் விலை உயர்ந்ததாக மாறும்

இந்த நடவடிக்கை மிகவும் விலை உயர்ந்ததாக மாறும்

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தால் இழப்பீடு பெறுவதற்கு அதிகமான நுகர்வோர் புகார் செய்தால், அல்லது மீண்டும் ஒருமுறை துணைக்கருவிகளைச் சேர்க்கும்படி கட்டாயப்படுத்தினால், இந்த நடவடிக்கை மிகவும் விலை உயர்ந்ததாக மாறும் என்று சொல்லாமல் போகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் ஐபோன் 12 இல் தொடங்கும் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜிங் பிரிக் மற்றும் ஹெட்செட்டைச் சேர்ப்பதை ஆப்பிள் நிறுத்தியது. இது மின்-கழிவைக் குறைக்கத் தனது பங்கைச் செய்வதாகவும், சுற்றுச்சூழலுக்குச் சிறந்த நடவடிக்கை என்றும் கூறியது.

காரணம் சரியாக இருந்தாலும், நிறுவனம் தனியாக சார்ஜர்களை விற்பது எதற்காக?

காரணம் சரியாக இருந்தாலும், நிறுவனம் தனியாக சார்ஜர்களை விற்பது எதற்காக?

எனினும் இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். காரணம், ஆப்பிள் நிறுவனம் "சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் தாக்கங்களைக் குறைக்க இதுபோன்ற நடவடிக்கை முயல்கிறது என்ற கூற்று அர்த்தமற்றது. ஏனெனில், நிறுவனம் இந்த அத்தியாவசிய துணைப் பொருளைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது. ஆனால், இப்போது அதைத் தனித்தனியாக விற்பனை செய்து வருகிறது," என்று Pinheiro தனது அறிக்கையில் தெரிவித்தார்.

யூ.எஸ்.பி டைப்-சி கேபிளைப் பயன்படுத்துவதும் தவறானது - நீதிபதி

யூ.எஸ்.பி டைப்-சி கேபிளைப் பயன்படுத்துவதும் தவறானது - நீதிபதி

அதேபோல், ஆப்பிளின் தயாரிப்புடன் பிரத்தியேகமாகப் பொருந்தாத யூ.எஸ்.பி டைப்-சி கேபிளைப் பயன்படுத்துவதாகவும், மூன்றாம் தரப்பு சார்ஜர்களுடன் பயன்படுத்தப்படலாம் என்றும் ஆப்பிள் கூறியதை நீதிபதி நிராகரித்தார். இந்த சாதனம் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், எந்த யுஎஸ்பி போர்ட்டிலும் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். உலகத்தின் முன்னணி நிறுவனம் அதன் பயனர்களுக்கு இப்படி ஒரு நியாயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதி கூறினார்.

மற்ற நீதிமன்றங்கள் இதை இதேபோன்ற வெளிச்சத்தில் பார்க்குமா?

மற்ற நீதிமன்றங்கள் இதை இதேபோன்ற வெளிச்சத்தில் பார்க்குமா?

உலகெங்கிலும் உள்ள மற்ற நீதிமன்றங்கள் இதை இதேபோன்ற வெளிச்சத்தில் பார்க்குமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மேலும், ஆப்பிள் அதன் தொலைப்பேசி பேக்கேஜிங்கில் சார்ஜர்களை மீண்டும் வைக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. ஆப்பிள் மீண்டும் ஒரு முறை தனது பெட்டியில் சார்ஜர்களை வழங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களின் கருதி என்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பிரேசிலில் இது தொடர்பாகப் புகார் செய்த வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த நஷ்டஈடு நியமானது தானா என்பதைப் பற்றியும் கருது தெரிவியுங்கள்.

Best Mobiles in India

English summary
Brazilian Judge Rules Selling iPhone Without Charger In Its Box Is Abusive And Illegal : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X