முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!

|

எதிர்காலத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களை மூளையைக் கொண்டு பயன்படுத்த முடியும் என்று கூறினால் நம்புவீர்களா? நம்புங்க.! ஒரு சிறிய சிப் மூலம், இனி இதையும் நீங்கள் போன் இல்லாமல், நேரிடையாக மூளைக்குள் இருந்தே கட்டுப்படுத்தலாம் என்கிறது இன்றைய தொழில்நுட்பம்.

எலான் மஸ்க் ஆரம்பித்த நியூராலிங்க் (Neuralink) என்ற மூளை மற்றும் கணினியை இணைக்கும் தொழில்நுட்பத்தை முன்னோடியாக வைத்து, ப்ரிசிஷன் (Precision) என்ற நிறுவனம் மூளையைக் கொண்டு சோசியல் மீடியாவை கையாளும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. நியூராலிங்க் மூலம் கவரப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்பமாக இது இருந்தாலும், நியூராலிங்க் இலிருந்து முற்றிலுமாக இது வேறுபட்டுள்ளது.

முடியை விட சிறிய மூளை சிப்.! Facebook, Instagram கண்ட்ரோல் மூளையில்.!

மூளை மூலம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடிக்களை இயக்கலாமா?

கைகளைப் பயன்படுத்தி இணையதளங்களில் சோசியல் மீடியாக்களை பயன்படுத்த முடியாதவர்கள், தங்கள் மூளை அனுப்பும் சிக்னல் மூலம், சோசியல் மீடியாக்களை பயன்படுத்த அனுமதிக்கும் - ஒரு ஹை-டெக் தொழில்நுட்பம் தான் இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம் என்கிறது Precision நிறுவனம். கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியாத, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்கவாத நோயாளிகளைக் கருத்தில் கொண்டு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனிதனின் தலை முடியை விட மெல்லியதாக இருக்கும் ஒரு பிரைன் இம்பிளான்ட் சிப் (Brain Implant) மூளைக்குள் செலுத்தப்படும். லேயர் 7 கார்டிகல் இன்டர்ஃபேஸ் (Layer 7 Cortical Interface) என்று கூறப்படும் இந்த இம்ப்ளாண்ட் (Implant), வளைவுத்தன்மை (Flexible) கொண்ட மெல்லிய ஃபிலிம் (Thin film) போன்ற ஒரு பொருளாகும். இதில் எலக்ட்ரோடுகள் (Electrode) இருக்கும்; இந்த ஸ்ட்ரிப்பினுடைய (Strip) தடிமன் மனிதனின் தலை முடியை விட ஐந்து மடங்கு சிறியதாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் மெல்லியதாக இருக்கும் காரணத்தினால் திசுக்களைப் பாதிக்காமல் இதனைச் சுலபமாக மூளையில் பொருத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மூளையில் பொருத்தப்பட்டுள்ள இந்த இம்ப்ளாண்ட் மூளையில் எழுப்பப்படும் சிக்னல்களை சேகரித்து, அதனை வெளியில் இருக்கும் கருவிக்கு அனுப்பும். அந்த சிக்னல்களை வைத்து அந்த கருவி சோசியல் மீடியா பக்கங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

முடியை விட சிறிய மூளை சிப்.! Facebook, Instagram கண்ட்ரோல் மூளையில்.!

நீங்க நினைத்தால் மட்டும் போதும்.! தானாக போனில் மாற்றங்களை நிகழும்.!

அதாவது, இந்த லேயர் 7 கார்டிகல் இன்டர்ஃபேஸ் சிப் பொருத்தப்பட்ட மனித மூளையுடன் வெளியில் ஒரு கருவி இணைக்கப்பட்டிருக்கும். மூளையில் நீங்கள் நினைப்பது சிக்னலாக மாற்றப்பட்டு, வெளியில் இருக்கும் கருவிக்கு அனுப்பப்பட்டு, அதன் மூலம் நீங்கள் நினைக்கும் செயல்பாடுகள் உங்கள் போனில் நிறைவேற்றப்படும்.

" உதாரணத்திற்கு சோசியல் மீடியா பக்கத்தை ஸ்கிரால் (Scroll) செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்கள் போனில் ஸ்கிரால் அம்சம் வேலை செய்யும். நீங்கள் ஒரு போஸ்டை லைக் (Like) செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்கள் மூளை சிக்னல், போன் சிக்னலாக மாற்றப்பட்டு, உங்கள் போனில் அது லைக் கட்டளையை இயக்கும்." இப்படி தான் இந்த சிப் உங்கள் மூளை மூலம் போனை கட்டுப்படுத்த அனுமதிக்கப்போகிறது.

இத்தகைய பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நரம்பியல் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். யாருக்குமே, மூளையில் தொலையிட்டு ஒரு சிப்பை பொருத்திக்கொள்வது என்பது மிகவும் அசௌகரியமான விஷயமாகத் தான் இருக்கும்.

முடியை விட சிறிய மூளை சிப்.! Facebook, Instagram கண்ட்ரோல் மூளையில்.!

இந்த சிப்பை பொறுத்த மண்டை ஓட்டில் துளையிட வேண்டாமா? ஈசி இம்பிளான்ட்-ஆ.!

ஆனால் இந்த சிப்பானது அப்படியில்லை. காரணம், இது மிகவும் மெல்லியதாக இருப்பதால், இதனை இம்ப்ளாண்ட் செய்ய மண்டையோட்டில் ஒரு மில்லிமீட்டருக்கும் (Millimeter) குறைவான அளவில் இம்பிளான்ட் செய்தால் போதும். மனித முடியை விட 5 மடங்கு சிறியது என்பதனால், இந்த சிப்பை இம்ப்ளாண்ட் செய்ய விரும்புவோர் பயப்படத் தேவையில்லை என்று ப்ரிசிஷன் நிறுவனத்தின் CEO மைக்கேல் மேஜர், சமீபத்தில் CNBC பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, ஆரம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு மட்டும் அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த லேயர்7 கார்டிகல் இன்டர்ஃபேஸ் சிப், எதிர்காலத்தில் அதன் பயன்பாடு அதிகரிக்கும் பொழுது சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அறிமுகம் செய்யப்படும் என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சிப்பை உங்கள் மூளையில் நீங்கள் பொருத்திக்கொள்ளத் தயாரா? அல்லது இது மனித வாழ்க்கையில் வேறு ஏதேனும் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படலாமா என்ற உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Brain Implant Layer 7 Cortical Interface Chip Allows People To Control Facebook Instagram With Mind

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X