Home
News

இலக்கை துல்லியமாகத் தாக்கியது: பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி.!

இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயாரித்துள்ளது. மேலும் இந்த அதிநவீன ஏவுகணை சோதனை நேற்று வங்காள விரிகுடா பகுதியில் நடைபெற்றது.

 சுகோய்-30 ரக போர் விமானம்

சுகோய்-30 ரக போர் விமானம்

அதுவும் சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக விமானப்படை தெரிவித்தது. அதேபோல் இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த ஏவுகணை சோதனை உதவியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

400 கி.மீ வரை சென்று தாக்கும்

மேலும் 400 கி.மீ வரை சென்று தாக்கும் இந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனை இந்திய விமானப்படை, இந்தியக் கடற்படை, டிஆர்டிஓ, பிஏபிஎல் மற்றும் ஹெச்ஏஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்னை

எல்லைப் பிரச்னை

குறிப்பாக சீனா, பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை சமீப காலங்களாகத் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது இந்திய விமானப்படையும், கப்பற்படையும் இணைந்து இந்த பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்

பலத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்

இலங்கையில் சீன உளவு கப்பல் ரோந்து மேற்கொள்வதும், பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் மூலம் அடிக்கடி ஊடுருவல் முயற்சிகளும் நடைபெறுவது இயல்பாகியுள்ளன. எனவே தான் இந்திய ராணுவம் தனது பலத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது பிரமோஸ் ஏவுகணை சோதித்துப் பார்ப்பதும், புதிய ஏவுகணைகளை உருவாக்குவதும் எனப் பல புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது இந்தியா.

 எல்லையைப் பலப்படுத்தும் பணிகள்

குறிப்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையே சுமார் 2,289 கி.மீ தொலைவு எல்லையாக இருக்கிறது. பின்பு இந்த பகுதியில் ஏற்கனவே 26 கி.மீ நீளத்தில் எல்லையைப் பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மேலும் 33 கி.மீ தொலைவுக்குப் பலப்படுத்தும் பணியை தற்போது BSF செய்து வருகிறது.

120 பிரளய் ஏவுகணைகள்

120 பிரளய் ஏவுகணைகள்

இதுதவிர இரு நாட்டு எல்லைகளில் சுமார் 120 பிரளய் ஏவுகணைகளை நிலைநிறுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதற்குப் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் தான் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் எந்தெந்த பகுதியில் எவ்வளவு ஏவுகணைகள் நிலை நிறுத்தப்படும் என்கிற விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 150 முதல் 500 கி.மீ தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது

150 முதல் 500 கி.மீ தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது

அதேபோல் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை பிரளய் ஏவுகணை 150 முதல் 500 கி.மீ தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. மேலும் இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணைத் திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BrahMos Missile successfully test-fired from a fighter jet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X