பாலியல் உறவு மற்றும் பணத்திற்காக ராணுவ ஏவுகணை ரகசியங்களை பாகிஸ்தானிற்கு விற்ற அகர்வால் கைது.!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.

|

புது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளராகப் படித்து, தங்கப் பதக்கம் பெற்ற பிரகாசமான மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டு நடவடிக்கை கைது

கூட்டு நடவடிக்கை கைது

இந்திய இராணுவ புலனாய்வு மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையின் பெயரில் நிஷாந்த் அகர்வால் நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இராணுவ ரகசியம்

இராணுவ ரகசியம்

அவரது தனிப்பட்ட கணினியில் மிக முக்கியமான இராணுவ ரகசியங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைத் தகவல்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. அத்துடன் அவரது பேஸ்புக் அக்கௌன்ட் இல் பாகிஸ்தான் நாட்டு மர்ம நபர்களுடன் ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிஷாந்த் அகர்வால்

நிஷாந்த் அகர்வால்

நிஷாந்த் அகர்வால், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பேஸ்புக் ஐடி-களில் பகிர்ந்ததற்குக் கரணம்
"ஹனி ட்ராப்பிங்"காக இருக்குமோ என்றும் போலீசார் சந்தேகிக்கிறது. ஹனி ட்ராப்பிங் என்பது பாலியல் உறவு அல்லது பணத்திற்காக அரசியல் மற்றும் ரகசிய தகல்வல்களை தனி மனித ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் புலனாய்வு முறை என்பது பொருள் ஆகும்.

பேஸ்புக் லீக்

பேஸ்புக் லீக்

பிரமோஸ் ஏவுகணை தகவல் மற்றும் இராணுவ ரகசிய தகவல்களை பேஸ்புக் இல் லீக் செய்த குற்றத்திற்காக அவர் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அவரது வீட்டு மற்றும் அலுவலகக் கணினிகள் கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரம்மோஸ் ஏவுகணை

பிரம்மோஸ் ஏவுகணை

பிரம்மோஸ் ஏவுகணை, நிலம், கப்பல்கள், போர் விமானம் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து 300 கி.மீ. தொலைவில் இலக்குகளைத் தாக்கும் அதிவேக குரூஸ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் நடைபெற்ற முதல் உளவு ஊழல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சும்மாவே இந்தியாவை கையில் பிடிக்க முடியாது; இது வேறயா.?

சும்மாவே இந்தியாவை கையில் பிடிக்க முடியாது; இது வேறயா.?

முதலில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை பார்த்து உலக நாடுகள் அச்சம் கொள்வது ஏன் என்பதை அறிந்துகொள்ளவோம். பிரம்மோஸ் - ஆனது இரண்டு நிலைகள் கொண்ட திட எரிபொருள் பூஸ்டர் என்ஜீன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். சூப்பர்சோனிக் வேகத்தில் பாயும் இதன் முதல் நிலை பாய்ச்சலானது இரண்டாம் நிலையில் அவ்வேகத்தில் இருந்து பிரிக்கப்படும்.

இதன் ஸ்டீல்த் டெக்னலாஜி வழிகாட்டி மற்றும் மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட மென்பொருளானது ஏவுகணையின் தாக்குதல் சக்தியோடு சேர்த்து எதிரிகளின் பயத்திற்கும் தீனி போடுகிறது.

சூப்பர்சோனிக் வேகத்தில் சுமார் 290கிமீ என்கிற தாக்குதல் தூரம் (அல்லது விமான வரம்ப) கொண்டுள்ள பிரம்மோஸ் ஆனது உலகின் எந்தவொரு ஆயுத அமைப்பாலும் இடைமறிக்கமுடியாத ஒரு ஏவுகணை ஆகும்.

அதிக விமான வரம்பு

அதிக விமான வரம்பு

குறைவான ஒளிச்சிதறல், தாக்குதலுக்கான வேகமான முடிவுகளை கையாளும் இந்தியாவின் பிரம்மோஸ் ஆனது உலக நாடுகளின் இதர சப்சோனிக் (ஒலி வேகத்தை விடக் குறைந்த) ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு சிறப்பானதாகும். அதாவது 3 மடங்கு அதிக வேகம், 1.5 முதல் 3 மடங்கு அதிக விமான வரம்பு (தாக்குதல் எல்லை), 3 முதல் 4 மடங்கு அதிக தேடல் வீச்சு, 9 மடங்கு அதிகமான இயக்க நேரம் கொண்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்

கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்

அப்படியான உலகின் அதிவேகமான சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ்-ன் பூஸ்டர் (திட எரிபொருள்) இனி இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இதன் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்" என்று கடந்த புதன்கிழமை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

சென்னையில் நடந்த பாதுகாப்புத் துறை வளர்ச்சி சந்திப்பின் போது, டி.ஆர்.டி.ஓ நிறுவனம் ஒரு நாக்பூரை சார்ந்த தனியார் நிறுவனத்துடன் பூஸ்டர் தயாரிப்பிற்கான டிஓடி (டிரான்ஸ்பர் ஆப் டெக்னலாஜி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

இதற்கு முன்னர் டி.ஆர்.டி.ஓ நிறுவனமானது ரஷ்யாவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து அதன் ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் ரிசர்ச் லேபோரட்டரியில் (High Energy Materials Research Laboratory - HEMRL) பிரம்மோஸ் ஏவுகணைக்கான பூஸ்டரை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

தற்போது வரையிலாக ​​ஆண்டுதோறும் 35 பூஸ்டர்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை போர் விமானங்களில் இணைப்பதின் வழியாக இந்த பூஸ்டர் தேவை எதிர்காலத்தில் அதிகரித்து கொண்டே போகும் என்பதை மனதிற்கொண்டு உள்நாட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்

பட்ஜெட்

உள்நாட்டு உற்பத்தியானது பராமரிப்பு முறையை சரியான நேரத்தில் நிகழ்த்த உதவுவதோடு சேர்த்து செலவுகளையும் கடுமையாக குறைக்கும் என்பதில் சந்தேகமமே வேண்டா. ஏனெனில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திடம் நிகழ்த்தும் இறக்குமதிகளுக்காக, இந்தியா அதன் 15 சதவிகித பட்ஜெட்டை செலவழித்து வருகிறது.

வெற்றி

வெற்றி

இந்த பிரம்மோஸ் ஏவுகணையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய விமானப்படையின் சுக்கோயி-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து முதல் முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வெற்றிகண்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BrahMos Engineer Arrested For Spying Chatted On Facebook With Pak IDs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X