Home
News

காதலியின் கார் டயரில் ஆப்பிள் வாட்ச்: எந்நேரமும் கண்காணித்து கொண்டே இருந்த காதலன்-கைது.!

ஆப்பிள் நிறுவனம் தனித்துவமான மென்பொருள் வசதிகளுடன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களை போன்றே ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு உடல்நல பாதுகாப்பு கண்காணிப்புக்கும் சிறந்த பயன்பாடாக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயன்பட்டு வருகிறது.

 எடுத்து பேசுவது, துண்டிப்பது, சாலைகளில் பயணிக்கும் போது மேப் செக் செய்வ

குறிப்பாக வரக்கூடிய அழைப்புகளை எடுத்து பேசுவது, துண்டிப்பது, சாலைகளில் பயணிக்கும் போது மேப் செக் செய்வது, ஸ்மார்ட் வாட்ச் கையில் இருக்கும் போது இதய துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, நடை பயண தூரம், உடற்பயிற்சி நிலை, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கண்காணிப்புகள் ஸ்மார்ட் வாட்ச் மூலம் மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் வாட்சைப் பின்தொடர்ந்து செல்லும்

ஆனால் ஆப்பிள் வாட்சைப் பின்தொடர்ந்து செல்லும் சாதனமாக மாற்ற முடியும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒருபுது குற்றம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டென்னசி மாகாணத்தில் இருக்கும்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இருக்கும் நாஷ்வில்லியை சேர்ந்தவர் 29 வயதான லாரன்ஸ் வெல்ச். இவர் தனது காதிலியிடம் அதிகமாக சண்டையிடும் வழக்கம் உடையவர். அதேபோல் இவர் தனது காதலி எங்கு செல்கிறார் என்று தன்னிடம் தெரிவிக்க என்று கூறியுள்ளார்.

அவரது காதலி இதற்கு சம்மதம்

முதலில் அவரது காதலி இதற்கு சம்மதம் தெரிவித்து Life360 என்ற செயலியின் மூலம் இருவரும் இருப்பிடத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால் இவர்களுக்குள் ப்ரேக் அப் ஆன பிறகு இருப்பிடத்தை பகிர மறுத்துள்ளார் காதலி. இருந்தபோதிலும் லாரன்ஸ் வெல்ச் தொடர்ந்து இருப்பிடத்தைஅனுப்புமாறும், திரும்ப அழைக்குமாறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

குறிப்பாக காவலர்கள் காத்திருக்க அங்கு வந்

ஒரு கட்டத்தில் லாரன்சு கொலை மிரட்டல் விடுத்ததால் காதலி பாதுகாப்பு மையத்திற்கு வந்துள்ளார். பின்பு காவலர்கள் லாரன்சை தொடர்பு கொண்டு அவரையும் அங்கு வருமாறு கூறினார். குறிப்பாக காவலர்கள் காத்திருக்க அங்கு வந்த லாரன்ஸ் காதலியின் கார் டயர் அருகே சென்று ஏதோசெய்து கொண்டிருப்பதை காவலர்கள் பார்த்துவிட்டனர்.

கார் டயரை சோதனை செய்த போது

உடனே கார் டயரை சோதனை செய்த போது டயரில் இருந்து ஆப்பிள் வாட்ச் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. முதலில் நடைபெற்ற விசாரணையில் அந்த வாட்சை வைத்தது லாரன்ஸ் என்பதை கண்டறிந்தனர். அதன்பின்பு நடந்த விசாரணையில் லாரன்ஸ் காதலியை தொடர்ந்து கண்கானிக்க முடிவு செய்ததுதெரிய வந்தது.

மூன்றாம் தரப்பு கண்காணிப்பு செயிலி

குறிப்பாக மூன்றாம் தரப்பு கண்காணிப்பு செயிலி மூலம் காதலியின் இருப்பிடத்தை கண்காணித்துள்ளார் லாரன்ஸ். மேலும் குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரன்ஸை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 ஆப்பிள் வாட்சில் கண்காணிப்பைக்

குறிப்பாக ஆப்பிள் வாட்சில் கண்காணிப்பைக் கட்டுப்படுத்த ஒரு வழியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் கண்டுபிடித்தால் இன்னும் அருமையாக
இருக்கும்.

Best Mobiles in India

English summary
Boyfriend arrested for attaching Apple Watch to girlfriend's car: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X