அவர்களை புறக்கணிப்போம்: பிஎஸ்என்எல்லே துணை- ஜியோ, ஏர்டெல், விஐ விலை உயர்வு விவகாரம்: அணல் பறக்கும் மீம்ஸ்கள்!

|

உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் பல்வேறு பிரிவு நிறுவனங்களும் தங்களை நிலைநிறுத்தி வளர்ச்சியடையச் செய்ய போராடி வருகின்றன. இதில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிவிலக்கு அல்ல. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க குரல் அழைப்புகள், டேட்டா சேவை முதல் ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றன.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விலை உயர்வு

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விலை உயர்வு

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 60 சதவீதம் பேர் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகின்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு டிராய் என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. மறுபுறம் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பெரும் நஷ்டம் ஏற்படுவதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து விலை உயர்வு அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பொதுவாக ஆளும் கட்சி மேற்கொள்ளும் சாமர்த்தியமான நடவடிக்கைகளில் ஒன்று, எதிர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்ததும் அதற்கு ஏற்ப தங்களின் வேட்பாளர்களை தொகுதியின் நிலை அறிந்து அறிவிப்பது ஆகும். அதையே பெரும்பாலானோர் செய்வார்கள் எதிரில் இருப்பவர்கள் திறன் அறிந்து நம்மை சாமர்த்தியமாக நகர்த்திக் கொள்வார்கள். அதன்படி முதலில் ஏர்டெல் நிறுவனம் விலை உயர்வை அறிவித்து தொடர்ந்து வோடபோன் ஐடியா (விஐ) விலை உயர்வை அறிவித்தது. இவர்களின் விலை உயர்வை பார்த்து பொறுமை காத்திருந்த ஜியோவும் குறைந்தபட்ச அதிகரிப்புடன் விலை உயர்வை அதிகரித்து இருக்கிறது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ)

கட்டண உயர்வுக்கு எதிராக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) வாடிக்கையாளர்கள் வருத்தம்தெரவித்து வருகின்றனர். ஜியோ அறிமுகமான குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் ஜியோ குறைந்த விலையில் ஏணைய சலுகைகளை வழங்கியதே ஆகும். ஜியோ இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வுக்கு பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வுக்கு பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் பிஎஸ்என்எல்-ஐ நோக்கி செல்வது நல்லது என கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து மீம்ஸ்களும் கருத்துகளும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் பிஎஸ்என்எல் இணைய வேகத்தை முழுமையாக வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் தெரிவித்த சில மீம்ஸ்களை முழுமையாக காட்டப்படுகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ விலை உயர்வு அறிவிப்பு

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்த பின்னர், இதே போன்ற அறிவிப்பை இப்போது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம், ப்ரீபெய்ட் திட்டங்களை தொழில்துறையில் மலிவானதாக வைத்துள்ளது.

பிரபலமான திட்டங்களின் விலை அதிகரிப்பு

இது சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை (ARPU) கணிசமாக அதிகரிக்க உதவும். இதே காரணத்தை இதற்கு முன்பு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களும் இந்த விலை உயர்வைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஜியோவின் பெரும்பாலான பிரபலமான திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்பட்டக் கட்டணங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்பட்டக் கட்டணங்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின் படி, ஜியோ நிறுவனத்தின் அடிப்படை திட்டமான ரூ. 75 மதிப்புள்ள திட்டமானது இப்போது அறிவிக்கப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ஜியோ பயனர்களுக்கு ரூ. 91 என்ற விலையில் தான் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும்.

நிறுவனங்கள் அமல்படுத்திய விலை உயர்வு

ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வைத் தொடர்ந்து விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. புதிய விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வின் மூலம் திட்டங்கள் ப்ரீமியம் ரகத்தில் இருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. விஐ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது நவம்பர் 25 முதல் அமலுக்கு வந்தது. ஏர்டெல் விலை உயர்வை அறிவித்ததையடுத்து விஐ விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்போடு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விஐ அறிவித்த கட்டண உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்தது.

Best Mobiles in India

English summary
BoycottJioVodaAirtel Hashtag Trending on twitter after VI, Airtel, Jio Tariff Hikes: Time to change For bsnl

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X